​​
Polimer News
Polimer News Tamil.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை...

நீலகிரி மாவட்டம் உதகை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி நினைவுநாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்குள்ள குழந்தைகள் நல மையத்தில் சிறப்பு ஊட்டச்சத்து முகாமினை துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள்...

1,400 ஆண்டுகள் பழமையான கோவில் தீர்த்தகுளத்தில் 7 உறை கிணறுகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான வஷிஸ்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளத்தை தூர்வாரும் போது, 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாநகர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், 3 அடி...

தீயணைப்புத்துறையில் நவீன ரோபோட்கள்.. டெல்லியில் முதன்முதலாக பயன்பாட்டுக்கு வந்தது..

டெல்லியின் நெருக்கடியான இடங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க, இரு ரோபோட்களை தீயணைப்புத்துறையில் இணைத்துள்ளது அம்மாநில அரசு. கடந்த வாரம் முன்ட்கா (Mundka) பகுதியில்  ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட இந்த...

மேற்கு ஜெர்மனியை கடுமையான தாக்கிய சூறாவளிக்காற்று..

மேற்கு ஜெர்மனியை கடுமையான சூறாவளிக்காற்று தாக்கியுள்ளது. ஜெர்மனியில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக உயர் வெப்பநிலை நிலவி வருவதற்கு மத்தியில், வீசிய சூறாவளிக்காற்று வடக்கு ரைன் - வெஸ்ட்ஃபாலியா மாகாணத்தில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன்,...

உணவுப்பற்றாக்குறை அதிகரிப்பால் கோதுமை ஏற்றுமதியை நிறுத்திய தாலிபான் அரசு..

ஆப்கானிஸ்தானில் உணவுப்பற்றாக்குறை அதிகரித்திருப்பதன் காரணமாக கோதுமை ஏற்றுமதியை தாலிபான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. தாலிபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 22 மில்லியன் மக்கள் கடும் பசியால் வாடி வருவதாக உலக உணவு திட்டம் கூறியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் போர் தொடங்கியது முதலே ஆப்கானிஸ்தானில்...

மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழப்பு.. தப்பியோடிய போலி மருத்துவர்..

கடலூர் மாவட்டம் வேப்பூரில் மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், தப்பியோடிய போலி மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர். பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மகள் லட்சிதாவை கடந்த 7ம் தேதி காய்ச்சல், சளி...

நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு செய்த தருமபுரம் ஆதீனம்.. தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்..

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம், குருபூஜை விழாவை முன்னிட்டு நாற்காலி பல்லக்கில் சென்று வாழிபாடு நடத்தினார். தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் வைகாசி விழாவை ஒட்டி நாளை பட்டண பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், இன்று குரு பூஜை விழா...

ராஜீவ் நினைவுநாளையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுநாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். 1991ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் திருப்பெரும்புதூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இதன் 31ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று டெல்லியில் உள்ள அவரது...

குற்றவாளிகள் மட்டுமே காவலர்களை கண்டு அச்சப்பட வேண்டும்.. பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - டிஜிபி

காவல்துறையை கண்டு குற்றவாளிகள் மட்டுமே அச்சப்பட வேண்டும் என கூறிய டிஜிபி சைலேந்திரபாபு, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார். திருச்சியில், லாக்கப் மரணங்கள் தடுப்பு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்....

மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரம்.. மகளின் மாமியாரை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை..

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் மகளின் மாமியாரை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா, அதே கிராமத்தை சேர்ந்த வினித்-ஐ காதலித்து...