​​
Polimer News
Polimer News Tamil.

அரசு பள்ளிகளில் 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு Spoken English பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி அரசு பள்ளிகளில் 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு Spoken English பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை Spoken English பயிற்சி வழங்க ஆங்கிலப் புலமை...

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.... சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சேத்துப்பட்டு, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீசார் வெளிட்ட அறிவிப்பில், தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலை ஒரு வழிப்பாதையாக...

குஜராத்தில் 3 சரக்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து.!

குஜராத்தில் மூன்று சரக்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா - தன்சுரா சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை...

புனேயில் லால் மகாலில் நடனமாடி அந்த வீடியோவைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடனக் கலைஞர் மீது வழக்குப் பதிவு.!

புனேயில் சத்திரபதி சிவாஜி வரலாற்றுடன் தொடர்புள்ள லால் மகாலில் நடனமாடி அந்த வீடியோவைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடனக் கலைஞர் வைஷ்ணவி பாட்டீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் புனேயில் உள்ள லால் மகால் என்னும் கட்டடத்தில் சிவாஜி தனது இளமைக்...

சிரியாவில் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் பலி.!

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் கோலான் மலைப்பகுதியில் இருந்து, டமாஸ்கஸில் உள்ள ஆயுதக் கிடங்கை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் டமாஸ்கஸ் விமான...

மேட்டூர் அணையில் இருந்து மே 24 முதல் நீர் திறப்பு - முதலமைச்சர் உத்தரவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியை கடந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் பயிரிடுவதற்காக அணையில் இருந்து மே 24ஆம் நாள் முதல் தண்ணீரைத் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகத்திலும் தமிழகத்திலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக்...

ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 கி.மீட்டர் பயணிக்கலாம்.... விற்பனைக்கு வரும் ஓலா ஸ்கூட்டரின் புதிய மாடல்..!

நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வரும் நிலையில், ஓலா நிறுவனம் தனது புதிய மாடல்களான S1 மற்றும் S1 Pro-வை சந்தைப்படுத்த உள்ளது. ஓ.எஸ்.2 மென்பொருளுடன் இயங்கும் இந்த ஸ்கூட்டர்கள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்...

உலக அளவில் 11 நாடுகளில் 80 பேருக்கு, குரங்கு அம்மை நோய் உறுதி - உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் 11 நாடுகளில் 80 பேருக்கு, குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 11 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளது. அரிதான இந்நோய் குறித்து ஆய்வு...

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் மிதமான மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை...

நீலகிரி மாவட்டம் உதகை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி நினைவுநாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்குள்ள குழந்தைகள் நல மையத்தில் சிறப்பு ஊட்டச்சத்து முகாமினை துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள்...