​​
Polimer News
Polimer News Tamil.

சேலத்தில் விலை உயர்ந்த வளர்ப்பு நாய்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது.!

சேலத்தில் விலை உயர்ந்த வளர்ப்பு நாய்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்கள் திருடுபோனதாக போலீசில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொல்லப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் அதிகளவிலான...

கரூரில் 4 வயது மகனை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

கரூர் அருகே கவனக்குறைவால் 4 வயது மகனின் கண்பார்வை பறிபோய்விட்ட குற்ற உணர்ச்சியில், அவனை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்துகொண்டார். கோடாங்கிபட்டி ஆச்சிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி , வீட்டிலேயே தையல் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு...

களவு போன பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்த ஆணையர் ரவி.!

தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான களவு போன நகைகள், வாகனங்கள், செல்ஃபோன்களை போலீசார் மீட்டுள்ளனர். ஆணையரகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையர் ரவி கலந்து கொண்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார். ...

விருத்தாசலத்தில் “தின்னர்” திரவத்தைக் குடித்த 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக பலி.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே “தின்னர்” திரவத்தைக் குடித்த 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவர் மனைவி பரமேஸ்வரி திருவிழாவுக்காக தனது 10 மாத ஆண்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் பக்தர்கள்.!

கோடை விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், இலவசத் தரிசனத்துக்காக 30 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. திருமலையில் உள்ள 24 காத்திருப்பு அறைகளும் நிரம்பியதால் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு வரை வரிசையில்...

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி.!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனை தோற்கடித்து, தொழிலாளர் கட்சியின் அந்தோணி அல்பேனிஷ் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளார் என அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி 51...

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு உலோக சிலைகள் கடத்த முயன்ற 5 பேர் கைது.!

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு உலோக சிலைகள் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்ட எல்லையான சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் வாகன சோதனையில் இருந்த போலீசார், அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை...

இங்கிலாந்தில் பழமையான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வரும் எலெக்ட்ரிக் கார் நிறுவனம்.!

இங்கிலாந்தில் உள்ள எலெக்ட்ரிக் கார் நிறுவனம் ஒன்று பழமையான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வருகிறது. லண்டன் எலெக்ட்ரிக் கார்ஸ் என்ற அந்த நிறுவனம் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின்களை அகற்றிவிட்டு அவற்றுக்கு பதிலாக நிஸான் லீஃப் அல்லது டெஸ்லாவின் எலெக்ட்ரிக் என்ஜின்களை...

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைப்பு.!

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதுடன், தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, மாணவர் கூட்டமைப்பினர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைத்தியம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்த...

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம், உரமானியம் இரட்டிப்பு ஆகிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். பெட்ரோல்...