​​
Polimer News
Polimer News Tamil.

தமிழ்நாடு முழுவதும் 10 ரூபாய்க்கு மஞ்சள்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்.!

தமிழ்நாடு முழுவதும் தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். 10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் துணியிலான மஞ்சள்பையை வழங்கும் வகையில் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சிக்கு பின்னர் மாநிலம்...

ஐதரபாத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை.!

தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கொல்சாவாடி என்ற பகுதியைச் சேர்ந்த நீரஜ் பன்வர் என்ற அந்த இளைஞரும் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சஞ்சனா...

நெல்லை கல்குவாரி விபத்து - உரிமையாளர் செல்வராஜ் மற்றும் மகனிடம் விசாரணை

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக, மங்களூரில் நேற்று கைது செய்யப்பட்ட கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை முன்னீர்பள்ளம் காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விபத்தில்,...

கள்ளக்குறிச்சியில் காதலன் இறந்த துக்கத்தில் அவர் வீட்டிலேயே காதலி தூக்கிட்டுத் தற்கொலை.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே காதலன் இறந்த துக்கத்தில் அவர் வீட்டிலேயே காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாவும் நூரோலை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். 3 மாதங்களுக்கு முன் இருவருக்குள் சிறு...

காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் ரயில்வே.!

ஐந்து காற்றாலைகளை நிறுவியுள்ள தெற்கு ரயில்வே அவற்றின் மூலம் 8 கோடி யூனிட் மின்னுற்பத்தி செய்து 48 கோடி ரூபாயைச் சேமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், தலா 2 புள்ளி 1 மெகாவாட் திறன்கொண்ட 5 காற்றாலைகளை 2019 ஜனவரியில் நிறுவியது. அவற்றில்...

கன்னியாகுமரியில் ஆட்டோ மீது சிமெண்ட் கலவை லாரி மோதி விபத்து.!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆட்டோ மீது சிமெண்ட் கலவை லாரி ஏறி இறங்கியதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரணியல் பகுதியை சேர்ந்த பிரேம்நாத் என்பவர் தனது ஆட்டோவில், சாலையை கடப்பதற்காக...

ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 4000 கோடி டாலர் அமெரிக்கா நிதியுதவி

ரஷ்ய ராணுவத்தை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு உதவ நாலாயிரம் கோடி டாலர் வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே, அதை எதிர்கொண்டு முறியடிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆயுதங்கள்,...

நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு... குட்டு வைத்த ஐகோர்ட்டு..! 10 வருட வனவாசத்துக்கு முற்றுப்புள்ளி

10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததற்காக 40 வயது நபரின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்த நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தை சேர்ந்த...

சாலையில் நடந்துச் சென்ற காவலரின் மனைவியிடம் செயின் பறித்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

மதுரை வில்லாபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். எம்.எம்.சி காலனியைச் சேர்ந்த காவலரான முத்துராமலிங்கம் என்பவரது மனைவி முத்து, நேற்றிரவு தனது வீட்டிற்கு அருகே...

ஒரு லாரி எண்ணுக்கு வழங்கப்பட்ட அனுமதி.. அதே எண்ணில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி ஏராளமான லாரிகள் மணல் கொள்ளை.!

தஞ்சை மருவூர் மணல் குவாரியில், ஒரு லாரி எண்ணுக்கு எடுக்கப்பட்ட பர்மிட்டை வைத்து அதே எண்ணில் போலியாக ஸ்டிக்கர் அடித்து மற்ற லாரிகளில் ஒட்டி மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் பிடித்தனர். குவாரியில் மணல் அள்ள ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவது...