​​
Polimer News
Polimer News Tamil.

ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் அமைச்சர் விஜய் சிங்லா கைது

பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா கைதுசெய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் முதன்முறையாக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய் சிங்லா, அரசு ஒப்பந்தங்களில் ஒரு சதவீதம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் சிங்லா...

வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் வெளிநாடு பயணம்

சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி.ராஜேந்தர் வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் வெளிநாடு பயணம் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சுய நினைவுடன் நலமாக உள்ளார் - சிலம்பரசன் விரைவில் சிகிச்சை முடிந்து அனைவரையும் டி.ராஜேந்தர் சந்திப்பார் - சிலம்பரசன் டி.ராஜேந்தரின் மகனும், நடிகருமான சிலம்பரசன் டிவிட்டரில்...

மயக்கம் போட்ட மணமகன்... மண்ணடைலிருந்து விழுந்த விக்... கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்..!

உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் கழன்று விழுந்ததால், ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். உன்னாவ் மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தையநாள் மாலை அதற்கான அனைத்து சடங்குகளும் முடிந்த நிலையில், மணமகன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராவிதமாக அவரது தலையில் இருந்த 'விக்'-கும்...

ஒரே பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள் இடையே தகராறு.. இருவரிடமும் விசாரணை.!

திருப்பூரில், ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்ட விவகாரத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகரைச் சேர்ந்த அஜித், ஹரி ஆகியோர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும்...

கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் போர்வெல் அமைத்தும் குடிநீர் தரமில்லாமல் கிடைப்பதாக குற்றச்சாட்டு!

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் போர்வெல் அமைத்தும் குடிநீர் தரமில்லாமல் கிடைத்ததால், புதிய போர்வெல் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் அந்த...

கஞ்சா தடுப்பு வேட்டையில் இதுவரை 20000 பேர் கைது

தமிழகத்தில் கஞ்சா தடுப்பு வேட்டையில், இதுவரை 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு, மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

திருத்தணியில் கோவில் ஊழியரை பக்தர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சி.. போலீசார் விசாரணை!

திருத்தணி முருகன் கோவிலில், சிறப்பு வழியில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாததால் ஏற்பட்ட தகராறில், கோவில் ஊழியரை பக்தர் ஒருவர் சரமாரியாக தாக்கிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இக்கோவிலில் 150 ரூபாய் கட்டண வரிசையில் உள்ளூர் பக்தர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவது வழக்கம். செவ்வாய் கிழமையான இன்று...

கோயில் திருவிழாக்களில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் இருக்கக் கூடாது -உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க தரக்கோரி மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன....

சுமார் 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத பறக்கும் ஊர்வனையின் புதைபடிவம் கண்டுபிடிப்பு.!

எட்டரை கோடி ஆண்டுகளுக்கு முன், டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறக்கும் ஊர்வன ஒன்றின் புதைபடிவ எச்சங்கள் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அண்டிஸ் மலைப்பகுதியில் டெரோசர் என்றழைக்கப்படும் இந்த பறக்கும் ஊர்வன இனத்தின் புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பறவைகள் தோன்றுவதற்கு முன், பூமியில் பறந்து திரிந்த...

சண்டிகர் - மணாலி நெடுஞ்சாலையில் தொடர் மழையினால் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு.!

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சண்டிகர் - மணாலி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. திங்கள் கிழமை மாலையிலிருந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்டி- குலு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவினால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படவில்லை...