​​
Polimer News
Polimer News Tamil.

பாகிஸ்தானில் 80 சதவீத சிறுபான்மையினருக்கு குறைந்த ஊதியம்;பாகுபாடுகளை களைய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

பாகிஸ்தானில் 80 சதவீதம் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகள் வேலைவாய்ப்பு துறையில் தொடர்வதாகவும், சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50 சதவீதம் காலியிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை...

அமெரிக்கா துவக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு.!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளியில் 18 வயது இளைஞனால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நிகழ்வில், 19 சிறுவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். டெக்சாசின் ராப் துவக்க பள்ளியில், கைத்துப்பாக்கி மற்றும் ரைபிளுடன் நுழைந்த சல்வடொர் ராமொஸ் என்ற இளைஞர் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில்,...

மும்பையிலும் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மெட்...!

மும்பையிலும் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மெட் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி மும்பையிலும் அமலுக்கு வருகிறது அடுத்த 15 நாட்களில் இந்த விதி அமலுக்கு வரும் என மும்பை போக்குவரத்துப் போலீசார் அறிவிப்பு ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.500...

நான் முதல்வன் திட்டத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை - முதலமைச்சர்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில்...

அதிமுக நிர்வாகிகள் சிலர் என்னுடன் பேசிக்கொண்டு உள்ளனர் - வி.கே.சசிகலா

அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தன்னை எதிர்க்கவில்லை எனவும், சிலர் தன்னுடம் பேசிக்கொண்டு தான் உள்ளதாக வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் திருமண விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். ...

ரஷ்ய வீரர்களின் சடலங்களை சேகரித்து வரும் உக்ரைன் வீரர்கள்.. கார்கீவ் பகுதியில் ரஷ்ய வீரர்கள் 60 பேரின் சடலங்கள் மீட்பு..!

ரஷ்ய படைகளால் சிறை வைக்கப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்காக, போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் சடலங்களை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி வருகின்றனர். ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த கார்கீவ் பகுதியை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன் வீரர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் ரஷ்ய வீரர்கள்...

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று தொடங்கி அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று...

வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

வடகொரியா, ஜப்பான் கடலை நோக்கி 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. சுனான் பகுதியில் இருந்து, அடுத்தடுத்து 3 கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறியுள்ளது. ஜப்பானின் கடலோர காவல்படையும் இதனை...

அமெரிக்கா-தென்கொரியா வீரர்கள் கூட்டாக ஏவுகணை பயிற்சி

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில், அமெரிக்க படையினருடன் இணைந்து தென்கொரியா ஏவுகணை பயிற்சிகளை நடத்தியிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஜோ பைடன் ஆசியாவை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் வடகொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும்...

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். நிஜிபாத் பகுதியை தீவிரவாதிகள் கடக்கும் போது உள்ளூர் போலீசாரும் ராணுவ வீரர்களும் இணைந்து நடத்திய தாக்குதலில் 3 பேரும் கொல்லப்பட்டதாகவும், போலீசார் தரப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும் காஷ்மீர்...