​​
Polimer News
Polimer News Tamil.

திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசனம் செய்ய ரூ.200 கோடி செலவில் HCL நிறுவனத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் சேகர்பாபு.!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய 200 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விரைவு தரிசனம் செய்வதற்கான பணிகள் HCL நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும்...

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் ரேன்சம்வேர் தாக்குதலால் விமானங்களின் பயணம் தாமதம்.!

இந்தியாவின் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் மென்பொருள் அமைப்புகள் மீது ரேன்சம்வேர் தாக்குதல் முயற்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தாக்குதல் முயற்சி நடைபெற்றதால், காலை புறப்பட வேண்டிய சில விமானங்களின் பயணம் தாமதமானது. தற்போது, பிரச்சனை சரிசெய்யப்பட்டு விமானப்போக்குவரத்து சீராகியுள்ளதாக ஸ்பைஸ் ஜெட்...

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை தவறவிட்ட பெற்றோர்.. சிசிடிவி உதவியுடன் 30 நிமிடத்தில் பத்திரமாக மீட்ட ரயில்வே போலீசார்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் தவறவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை அரை மணி நேரத்தில் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வினோத் குமார் - லதா தம்பதி தங்களது குழந்தை ருத்விக் உடன் விசாகப்பட்டினம் செல்ல ரயில்...

நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்து.. குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். சிதம்பரம் அடுத்த கூத்தன்கோயில் பகுதியில் அதிகாலை சுமார் 3 மணியளவில், நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் சேலத்திலிருந்து டைல்ஸ் ஏற்றி...

கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்தியாவுக்கு வேண்டுகோள் - ஐஎம்எப் தலைவர்

கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நிதி அமைப்பான IMF தலைவர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்றுமதி தடையை விலக்கக் கோரிய ஐ.எம்.எப். சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா பங்காற்ற முடியும்...

ஜப்பான் கடல்பகுதியில் பறந்த சீனா- ரஷ்யா ஜெட் விமானங்கள்.. வழக்கமான ரோந்து பயிற்சிதான் என்று சீனா விளக்கம்..!

குவாட் மாநாடு நேற்று நடைபெற்றபோது, ஜப்பான் விமானப் பரப்பு அருகே கடல் மீது திடீரென சீனா மற்றும் ரஷ்யாவின் போர் விமானங்கள் வட்டமிட்டன. இது வழக்கமான ரோந்துப் பணிதான் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கடல்பகுதி, கிழக்கு சீனா...

ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி விபத்து..!

தெற்கு ஜெர்மனியில் ஆளில்லா ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில், மேலும் சில பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஜெர்மனியின் உல்ம்...

தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது.. 62 சவரன் தங்க நகைகள் மீட்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவுடையாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது நிஜாம் என்பவர் கடந்த மாதம் 24ம் தேதி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து...

தாவூத் இப்ராகிமும் சோட்டா ஷகீலும் பாகிஸ்தான் கராச்சியில் உள்ளனர்.. கைது செய்யப்பட்ட சோட்டா ஷகீல் உறவினர் வாக்குமூலம்..!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி தாவூத்தும் அவன் கூட்டாளியான சோட்டா ஷகீலும் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வசிப்பதாக அவருடைய உறவினர் வாக்குமூலம் அளித்துள்ளார். மும்பையில் தாவூத் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சோட்டாஷகீலின் உறவினர்...

துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் - ஜோ பைடன்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து அதிபர் ஜோ பைடன் வாஷிங்டன் திரும்பினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், டெக்ஸாஸில் 18 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை இன்றிரவு தூங்க...