​​
Polimer News
Polimer News Tamil.

"புதினிடம் நானே நேரா வந்து பேச ரெடி"..உக்ரைன் அதிபரின் அதிரடி அறிவிப்பு..!

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய ஜெலன்ஸ்கி, போர் நிறுத்தம் தொடர்பாக பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும்...

தாய் இறந்ததை மறைத்து மகள்களை தேர்வெழுத வைத்த தந்தை..! உண்மையறிந்து கதறிய மகள்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், விபத்தில் தாய் இறந்ததை மறைத்து தந்தை தனது, மகள்களை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுப்பி வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. பெரியசாமி - முத்துமாரி தம்பதியின் மகள்கள் வானீஸ்வரி, கலாராணி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்....

பிரிட்டன் ராணியாக முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுள் நிறைவு.. 15 கிலோ எடையில் மிகப்பெரிய தங்க நாணயம் வெளியீடு!

பிரிட்டன் ராணியாக எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து மிகப்பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 96 வயதான எலிசபெத் பிரிட்டன் ராணியாக கடந்த 1952-ம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். பிரிட்டன் ராணியாக அதிக ஆண்டுகள் இருக்கும் இவரது 70-ம் ஆண்டு பிளாட்டினம் ஜூபிலியை...

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழகத்தில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் ஜூன் 13-ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கல்வியாண்டுக்கான...

கொடைக்கானலில் 2-வது நாளாக நடைபெறும் மலர்க்கண்காட்சி: ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.!

கொடைக்கானலில் 2-வது நாள் மலர்க்கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். ப்ரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் மலர்க்கண்காட்சியில் பூத்து குலுங்கும் பல்வேறு வகையான மலர்களுடன் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். தோட்டக்கலை சார்பில் பல்வேறு வகையான மலைக்காய்கறிகள்,...

திடீரென தீப்பிடித்த "டெஸ்லா" மின்சார கார்.. ஜன்னலை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பிய ஓட்டுநர்

கனடா நாட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஓட்டுநர் வெளியேறினார். ஜமீல் ஜுத்தா (Jamil Jutha) என்ற அந்த நபர், 8 மாதங்களுக்கு முன் வாங்கிய டெஸ்லா நிறுவனத்தின் Y மாடல் மின்சார காரை ஓட்டிச் சென்ற...

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் 11 சாய ஆலைகளுக்கு சீல் வைப்பு.!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாக சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை வெளியேற்றிய 11 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதியில் இயங்கும் பெரும்பாலான சாய ஆலைகள், சாயக்கழிவுகளை ஆற்றில் வெளியேற்றுவதால் தண்ணீர் மாசடைவதாக புகார் எழுந்தது. மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில், விதிகளை மீறி...

குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால் 40,000 டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்தது ஜெர்மனி அரசு

ஜெர்மனியில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. டென்மார்க்கை தலைமையிடமாக கொண்ட பவேரியன் நோர்டிக் நிறுவனம் தயாரிக்கும் ஜின்னியோஸ் தடுப்பூசி, சின்னம்மை மற்றும் குரங்கம்மையால் பாதிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்த...

மாணவி சிந்துவை மருத்துவமனையில் நேரில் சந்தித்த முதலமைச்சர்..!

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபால் வீராங்கனையான மாணவி சிந்துவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். 12ஆம் வகுப்பு மாணவியான சிந்து, கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் 2வது மாடியில்...

ரயிலில் வடமாநிலத்தவர்கள் அட்டகாசம்.. ரயில்வே ஊழியர்களை முற்றுகையிட்ட பயணிகள்.. இறக்கி விட்ட ரயில்வே போலீசார்.!

ஹவுரா - கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக கூறப்படும் வடமாநிலத்தவர்களின் அட்டகாசத்தால் ஆத்திரமடைந்த பயணிகள், செங்கல்பட்டில் ரயிலை நிறுத்தி ரயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவின் ஹவுராவில் இருந்து சென்னை வந்த ரயிலில், ஏராளமான வடமாநிலத்தவர்கள் முன்பதிவு செய்யாமலேயே முன்பதிவு...