​​
Polimer News
Polimer News Tamil.

கள்ளச்சாராயம் அருந்தியதில் 6 பேர் உயிரிழப்பு ; 12 பேருக்கு சிசிக்சை

பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்திய மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலி மதுபாட்டில்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கீழபூசாரிப்பட்டி கிராமத்தில், குளத்தில் குளித்துக் கொண்டிருந்த அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அண்ணாவி நகரைச் சேர்ந்த சகோதரர்களான முரளி, மணிகண்டன் என்னும் சிறுவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்ற...

டிராக்டரில் உழுதுகொண்டிருந்த விவசாயி மீது மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் பாய்ந்து படுகாயம்

வாணியம்பாடி அருகே டிராக்டரில் உழுதுகொண்டிருந்த விவசாயி மீது மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார். கலந்திரா கிராமத்தை சேர்ந்த செளந்தர் என்பவர் விவசாய நிலத்தை உழுது கொண்டிருந்த போது, மின் கம்பம் ஒன்று அவரது டிராக்டர் மீது சாய்ந்தது. மின்சாரம் பாய்ந்ததால்...

ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளை விற்க ஒப்புதல்

ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான 29.5 சதவீத பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு 36 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. துத்தநாகம் உற்பத்தியில்...

"ரெண்டு நாளில் அவனை போடுறேன்".. சொன்னதைச் செய்த ரௌடி..!

சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், அவரை கொலை செய்யப்போவதாக முன்கூட்டியே மிரட்டிவிட்டுச் சென்ற ரௌடி, சொன்னபடியே செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்காணி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாஜக...

நியூ ஸ்கார்பியோவை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியுமாம்..! இது என்ன.. புது புரளியா இருக்கு.!

மகிந்திரா நிறுவனத்தின் சார்பில் விரைவில் வெளியாக உள்ள ஸ்கார்பியோ N  காரை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியும் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ள கருத்தால் அந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆக் ஷன் ஹீரோவை அறிமுகம் செய்வது போல ஸ்கார்பியோ N...

மத்திய அரசு போல தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல் ,டீசல் விலையை குறைத்தது போல் ,மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார். கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் இறுதிப் போட்டியில் நுழைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா.!

செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் சென்னையின் ஆர். பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் நுழைந்தார். நெதர்லாந்தைச் சேர்ந்த அனிஷ் கிரியை 3.5 - 2.5 என்ற புள்ளிக்கணக்கில் அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய...

ஆரம்ப பள்ளியில் துப்பாக்கி சூடு.. 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் பேச்சு குறைபாடால் கிண்டலடிக்கப்பட்டு வந்த 18 வயது இளைஞன் ஒருவன், ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக சுட்டதில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில், மெக்சிகோ எல்லையை ஒட்டி அமைந்துள்ள டெக்சாஸ் மாநிலத்தின் உவால்டே என்ற இடத்தில் உள்ள...

நிஃப்ட் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு.!

சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனத்தின் இயக்குனர் அனிதா மேபெல்...