​​
Polimer News
Polimer News Tamil.

சாலை தடுப்பில் மோதி நின்ற இருசக்கர வாகனம் மீது ஏறிய லாரி.. வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு..!

சாலை தடுப்பில் மோதி நின்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து லாரி மோதிய விபத்தில் வடமாநில இளைஞர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

கனடாவில் பள்ளி வளாகம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுட்டு கொன்ற போலீசார்.!

கனடா நாட்டில் பள்ளி வளாகம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் சுட்டு கொன்றனர். செவ்வாய்கிழமை, அமெரிக்காவில் உள்ள ஆரம்பபள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் டொரண்டோ நகரில் உள்ள ஆரம்ப பள்ளியில்...

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலைப் பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் புற்றுநோய் உள்பட பல கேடுகளை உடலுக்கு விளைவிப்பதால் தமிழகத்தில் இவற்றை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த...

நாமக்கல்லில் காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த மருமகன்.!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார். கருவேப்பம்பட்டியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுக்கும், கார்த்தி என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்திக்கு ஜன்னி வந்ததால்...

12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை-தேனி அகலப்பாதையில் புறப்பட்டுச் சென்ற முதல் ரயில்.. மக்கள் உற்சாக வரவேற்ப்பு.!

மதுரையில் இருந்து தேனி வரையிலான ரயில் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 12 வருடங்களுக்குப் பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டு தேனி வந்தடைந்த ரயிலை வழிநெடுகிலும் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை-தேனி ரயில் சேவையை காணொலி...

5 வயதில் 5 மாணவிகள் 5 வித திறமைகளை காட்டி சாதனை.!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் 5 வயது நிரம்பிய 5 மாணவிகள் 5 விதமான திறமைகளை வெளிக்காட்டி சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர். இப்பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் தமிழினியாள் என்ற சிறுமி திருக்குறளில்...

வெளிநாடுகளில் வாழ்வோருக்கு வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்தது பாகிஸ்தான்.. மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தவும் தடை..!

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பாகிஸ்தான் நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது. மின்னணு இயந்திரங்களை அவர்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு வெளிநாட்டில் வாழும் குடிமக்களும் வாக்களிக்க தேர்தல் விதிமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தது. இதனை ரத்து...

பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்.. ஆற்றின் இருபுறங்களிலும் கயிற்றினை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் விவசாயிகள்.!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த கன மழையின் காரணமாக பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன...

குறுவை சாகுபடிக்காக இன்று மாலை கல்லணை திறப்பு ..!

குறுவை சாகுபடிக்காக கல்லணை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நேற்றிரவு 8 மணி அளவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நள்ளிரவில் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதனை அடுத்து...

சீனா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் -அமெரிக்கா

சீனா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சீனாவுடன் பனிப்போர் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். யுஎஸ்ஸின் சீனா குறித்த கொள்கை என்ற தலைப்பில் வாஷிங்டனில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில்...