​​
Polimer News
Polimer News Tamil.

வெளிநாடுகளில் வாழ்வோருக்கு வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்தது பாகிஸ்தான்.. மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தவும் தடை..!

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பாகிஸ்தான் நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது. மின்னணு இயந்திரங்களை அவர்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு வெளிநாட்டில் வாழும் குடிமக்களும் வாக்களிக்க தேர்தல் விதிமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தது. இதனை ரத்து...

பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்.. ஆற்றின் இருபுறங்களிலும் கயிற்றினை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் விவசாயிகள்.!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த கன மழையின் காரணமாக பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன...

குறுவை சாகுபடிக்காக இன்று மாலை கல்லணை திறப்பு ..!

குறுவை சாகுபடிக்காக கல்லணை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நேற்றிரவு 8 மணி அளவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நள்ளிரவில் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதனை அடுத்து...

சீனா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் -அமெரிக்கா

சீனா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சீனாவுடன் பனிப்போர் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். யுஎஸ்ஸின் சீனா குறித்த கொள்கை என்ற தலைப்பில் வாஷிங்டனில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில்...

உரிய நேரத்துக்கு முன்னதாக ரயில் வந்ததால் பிளாட்பாரத்தில் கார்பா நடனம் ஆடிய பயணிகள்..!

பாந்த்ரா-ஹரிதுவார் எக்ஸ்பிரஸ் ரயில் உரிய நேரத்திற்கு முன்னதாக வந்ததையடுத்து மத்தியப் பிரதேசம் ரட்லம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் உற்சாகமாக பிளாட்பாரத்தில் கைதட்டி தட்டி சுற்றி வளைத்து கார்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் இந்த வீடியோவை...

ஹரித்துவார் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரல்.!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய மாவட்ட வன அதிகாரி தீபக் சிங், யானைகளின் இந்த சண்டையை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு யானையின் தந்தம் இந்த...

உக்ரைனின் பெரும் பணக்காரர் போரினால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்திற்காக ரஷ்யா மீது வழக்கு தொடர திட்டம்..!

உக்ரைன் நாட்டின் மரியுபோலில் 20 பில்லியன் டாலர் வரை சேதத்தை சந்தித்த உக்ரைனின் பெரும் பணக்காரரான ரினாட் அக்மெடோவ், பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக ரஷ்யா மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து உக்ரேனிய செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்ய...

ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக புகார்.. மசூதி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு.!

வாரணாசியின் ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக இந்துக்கள் சார்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மசூதி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மசூதிக்குள் சிவலிங்கம் போன்ற இந்து கோவிலுக்கான சின்னங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது...

ஒரு நிமிடத்தில் 21 ஆப்பிள்களை கையால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்த 70 வயது முதியவர்..!

பாகிஸ்தானைச் சேர்ந்த 70வயது முதியவர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 21ஆப்பிள்களை தனது கையால் இரண்டாக உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். Naseem Uddin என்ற 70வயதுடைய நபர் இதனை செய்துள்ளார். இங்கிலாந்தில் ஏற்கனவே ஒரு நிமிடத்தில் 13ஆப்பிள்கள் இரண்டாக உடைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருந்தது....

நடிகை அம்ரீன் பட்டை கொலை செய்த 2 தீவிரவாதிகளை 24 மணி நேரத்தில் சுட்டுக்கொன்ற காவல்துறை..!

ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை அமரீன் பட்டை கொலை செய்த தீவிரவாதிகள் இரண்டு பேர் 24 மணி நேரத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் நடைபெற்ற பல்வேறு துப்பாக்கிச் சண்டைகளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார்...