​​
Polimer News
Polimer News Tamil.

கடற்படை அகாடமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு.. கடற்படைத் தளபதி ஹரிக்குமார் பார்வையிட்டார்..!

கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. கடற்படை, கடலோரக் காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகளைப் பயிற்சிக்குப் பின் பணிக்கு அனுப்பும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பைக் கடற்படைத் தளபதி ஹரிக்குமார்...

சேலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேனில் திடீர் தீ விபத்து.!

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே, சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ், நியாஸ் ஆகிய இருவரும் சுற்றுலா செல்ல ஏற்காடு நோக்கி ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். ஏற்காடு பிரதான சாலையில் சென்ற...

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு

மக்களுக்காகக் காளை மாடுபோல உழைக்கப் போவதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை அருகே திருவேற்காட்டில் நடைபெற்ற பாமக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் மேடையில்...

சென்னையில் குப்பைத் தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு.. போலீசார் விசாரணை.!

சென்னை சூளை பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் மனித எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேப்பேரி கலத்தி அப்பா பிராதான சாலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பையை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிளாஸ்டிக் கோணிப்...

நின்னகரை ஏரிக்கு பறவைகள் வரத்து அதிகரிப்பு.. நாமக்கோழி, கிரேஸ், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட பறவைகள் வருகை..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நின்னகரை ஏரிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. எனினும், போதிய மரங்கள் இல்லாததால் அவை உயர்மின்னழுத்த கோபுரத்தில் நெருக்கமாக...

பிரபல ஆனந்தாஸ் ஹோட்டல் குழும உணவகங்களில் ரெய்டு.. 40 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!

கோவையில் பிரபலமான ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை முதலே ஆர்.எஸ் புரம், லட்சுமி மில், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும்...

இயல்பு நிலைக்கு திரும்பும் சீனாவின் ஷாங்காய் நகர்.. ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்த முடிவு..!

சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது...

வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.!

தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட 6 வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறை பதிவு...

ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து.. 4 பேர் பலி.!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 4 பேர் உயிரிழந்தனர். அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது பகுதியில், அதிகாலையில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது. அருகில் இருந்த 2 வீடுகளும்...

உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய்.. சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை..!

உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பரவல் நோய் பிரிவிற்கான இயக்குநர் சில்வி பிரையண்ட், இந்த குரங்கு அம்மை பாதிப்பு சமூகப் பரவலாக மாறி இன்னும்...