​​
Polimer News
Polimer News Tamil.

கோலம் போட்ட பெண்களில் ஒருவருக்கு பாக். அமைப்புடன் தொடர்பு

சென்னையில் கோலம் போட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் பாகிஸ்தான் அமைப்பில் தொடர்பில் இருப்பதால், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகரில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம்...

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீவிரம்

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அந்நாட்டின் நியூ சௌத் வேல்ஸில் உள்ள பேட்ஸ்மேன் பேயில் இருந்து விக்டோரியா வரை இரண்டு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் எரியும் காட்டுத் தீயால்...

புத்தாண்டின் முதல் நாளிலேயே குறைந்தது தங்கம் விலை

சென்னையில் புத்தாண்டின் முதல் நாளிலேயே ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 3742 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று 7 ரூபாய் விலை குறைந்து 3735 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 29936 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று...

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் பாசனத்திற்கான வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் காவிரி டெல்டா பகுதியில் மழை...

சென்னையில் அமைதியாக நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னையில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இன்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ஆடல்-பாடலுடன் நடைபெற்றது. புத்தாண்டு கொண்டாட்டங்களை அமைதியான...

பயங்கரவாதிகள் சுட்டதில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம்

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். ரஜோரி மாவட்டம் நவ்சோரா பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய வீரர்களை...

ஷாங்காய் நகரில் டிரோன்களைக் கொண்டு வண்ணமிகு வானொளிக் காட்சிகள்

சீனாவின் ஷாங்காய் நகரில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் டிரோன்களைக் கொண்டு வண்ணமிகு வானொளிக் காட்சிகள் உருவாக்கப்பட்டன. 2020-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு நாடுகளில் வண்ணமிகு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் ஷாங்காய் நகரில் அறிவியலுடன் கலைநயம் கைகோர்த்தது. அங்கு 2000...

டெஸ்ட் போட்டிகள் இனி 4 நாட்கள் ?

டெஸ்ட் போட்டியின் நாட்களை நான்காக குறைக்கும் ஐசிசி முடிவுக்கு இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தால் டெஸ்ட் போட்டிக்கான மவுசு குறைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பகல்-இரவு டெஸ்டை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட்...

ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி ஆழியாறு அணையின் மின் உற்பத்தி நிலையம் வழியாக பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு 2ம் போக பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து...

2019-20 நிதியாண்டில் டிசம்பரில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,03,184 கோடி வருவாய்

ஜிஎஸ்டி வரி வருவாய் டிசம்பர் மாதத்தில் மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாயாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 184 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜிஎஸ்டி...