​​
Polimer News
Polimer News Tamil.

ரஷ்யாவின் உரம் சப்ளையை உறுதி செய்துள்ள இந்தியா

ரஷ்யாவிடமிருந்து இந்தியா உரம் சப்ளையை உறுதி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவுடன் நீண்ட கால உர இறக்குமதிக்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தியது. உலகளவில் உரம்விலை அதிகரித்த நிலையில் ரஷ்யாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பல ஆண்டுகளுக்கு உரம் இறக்குமதி செய்ய உடன்படிக்கை...

இந்தோனேஷியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் மீட்பு... மாயமான 25 பேரை தேடும் பணி தீவிரம்.!

இந்தோனேஷியாவில் 42 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் இருந்து சென்ற படகு எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும்...

ஆற்றில் படகு தீப்பிடித்து வெடித்து சிதறி மூழ்கிய விபத்தில் 15பேர் காயம்

அமெரிக்காவின் Illinois ஆற்றில் படகு தீப்பிடித்து  வெடித்து சிதறி மூழ்கிய விபத்தில் 15பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் சிகாகோவின் தென்மேற்குப் பகுதியில் 73மைல் தொலைவில் உள்ள Seneca பகுதியில் நடந்துள்ளது. அந்தப் படகில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதை அடுத்து கரைக்கு திரும்பி சரி செய்து...

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. வருடாந்திர நினைவு நாள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த மர்மநபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், ஒருவர் உயிரிழந்தார். துல்சா நகருக்கு அருகே நடைபெற்ற வருடாந்திர நினைவு நாள் நிகழ்வில் ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த...

கேரளாவில் சற்று முன்னதாகவே தென்மேற்குப் பருவ மழைக்காலம் நேற்று தொடங்கியுள்ளது - வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் சற்று முன்னதாகவே தென்மேற்குப் பருவ மழைக்காலம் நேற்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு மழை. ஜூன் 1 ஆம் தேதி இது தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டில் இரண்டு நாட்கள் முன்பாகவே...

கட்டப்பையில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

கடலூர் அருகே கட்டப்பையில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்ட போலீசார், தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் சூப்பர் மார்கெட் அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கட்டப்பையில் இருந்துள்ளது. குழந்தையின்...

சாலையோர மரத்தில் மோதி பயணிகள் பேருந்து விபத்து... 10 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் மரத்தின் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். வசிர்புர் பகுதியில் அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர்...

நாட்டில் முதல் முறையாக ட்ரோன் மூலம் தபால் விநியோகம்.!

நாட்டில் முதல் முறையாக குஜராத்தில் ட்ரோன் மூலம் தபால்களை இந்திய அஞ்சல் துறை அனுப்பி உள்ளது. கட்ச் மாவட்டத்தில் உள்ள ஹபே கிராமத்தில் இருந்து ட்ரோன் மூலம் நெர் கிராமத்திற்கு தபாலை இந்திய அஞ்சல் துறை அதிகாரிகள் அனுப்பினர். மத்திய தகவல் தொடர்பு துறையின்...

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டு கலவரத்தினால் 70,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு.!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரம் காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் அரசுப் படையினருக்கும், பழங்குடியின கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே...

12-ஆவது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி.. சண்டிகரை வீழ்த்தி உத்தரப்பிரதேச அணி வெற்றி.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வந்த தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் உத்தரப்பிரதேசம் அணி சாம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றது. உத்திர பிரதேசம் மற்றும் சண்டிகர் அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில், உத்தர பிரதேச அணி வீரர்கள் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி...