​​
Polimer News
Polimer News Tamil.

உச்ச வரம்பையும் தாண்டி 18 மடங்கு யூரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை.!

2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் படி அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பையும் தாண்டி 18 மடங்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போடப்பட்ட அணுசக்தி பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் படி...

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு விசா - இங்கிலாந்து அறிவிப்பு

உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிரத்யேக விசா திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்தி உள்ளது. உலகின் தலைசிறந்த மாணவர்களை பணியமர்த்தி பொருளாதாரத்தை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் இளங்கலை அல்லது முதுகலையில்...

சீனாவின் மக்கள் தொகை 60ஆண்டுகளுக்குப் பிறகு சரிவு.!

சீனாவின் மக்கள்தொகை 60ஆண்டுகளுக்கு பிறகு சரிந்துள்ளது.கடந்த ஓராண்டில் மக்கள்தொகை வெறும் 4 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே அதிகரித்துள்ளது. சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும்...

உங்களுக்குத் தொப்பை ஏன் பெரிதாக இருக்கிறது? நகராட்சித் தலைவரிடம் மம்தா பானர்ஜி கேள்வி

"உங்களுக்குத் தொப்பை ஏன் இவ்வளவு பெரியதாக இருக்கிறது?" என்று நகராட்சித் தலைவர்  ஒருவரை பார்த்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புரூலியாவில் கட்சியின் நிர்வாக குழுக் கூட்டத்தில் பொதுத்துறை பணிகளில் ஏற்படும்...

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல்.. போலீசார் விசாரணை.!

சென்னையை அடுத்த மாங்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் வீட்டிற்குச் சென்ற மர்ம நபர்கள் கத்திமுனையில் அவரைக் காரில் கடத்திச் சென்றுள்ளனர். சுரேஷ்குமார் தனது வீட்டை 2...

ரஷ்யாவிடம் இருந்து 34 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது இந்தியா.!

உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு முழுவதும் வாங்கியதை விட 3 மடங்கு அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் 34...

போரில் உக்ரைனுக்கு பெரிதும் உதவிய துருக்கி டிரோன்களுக்கு முழு உலகமும் வாடிக்கையாளராக மாறும் - துருக்கி டிரோன் வடிவமைப்பாளர்

உக்ரைன் போருக்குப் பிறகு முழு உலகமும் தங்களின் டிரோன் தயாரிப்புக்கு வாடிக்கையாளராக மாறி விடும் என்று துருக்கி டிரோன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவக் கூடிய வகையில் துருக்கி தயாரிப்பான  Bayraktar TB2 வான்வழி டிரோன்கள் ரஷ்ய பீரங்கிகள், கவச வாகனங்கள் முற்றிலுமாக...

ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு கல்லீரல் தொடர்புடைய ஹெபாடிடிஸ் நோய்..!

ஆர்கானிக் ஸ்ட்ராபரி பழங்களில் இருந்து பரவும் கல்லீரல் தொடர்புடைய ஹெபாடிடிஸ் நோய் குறித்து அமெரிக்கா மற்றும் கனடா  உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் விசாரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா நகரங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்டராபரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு ஹெபாடிடிஸ்...

ஆர்யன் கான் வழக்கில் சர்ச்சையில் சிக்கிய ஷமீர் வான்கடே சென்னைக்கு பணி மாற்றம்..!

போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை தவறாக கைது செய்த மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் மண்டல தலைவர் சமீர் வான்கடே சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்...

உக்ரைன் பொருளாதாரத்தை மீட்க 9 பில்லியன் யூரோ நிதி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

ரஷ்ய படையெடுப்பால் சீர்குலைந்த உக்ரைன் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைக்கு உடனடி நிதியாக 9 பில்லியன் யூரோவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ்சில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உக்ரைனின் உடனடி பணப்புழக்க தேவைகளுக்கு...