​​
Polimer News
Polimer News Tamil.

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்.. மருத்துவரை கைது செய்த போலீசார்..!

சேலம் அருகே தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை Deayhஉறவினர்கள் அடித்து நொறுக்கினர். சேலம் மாவட்டம் சவுரியூரை சேர்ந்த பெண் ஒருவர், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக எடப்பாடியில் உள்ள அரவிந்த்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, மருத்துவர் தவறான சிகிச்சையளித்து...

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல், 3ல் 2 பங்கு...

கடை முதலாளி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் கடிதம் எழுதி விட்டு தீக்குளிப்பு

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் குடும்ப வறுமையை போக்க வேலைக்கு சென்ற தன்னை, கடை முதலாளி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக கடிதம் எழுதிவிட்டு பெண் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு பவானியை சேர்ந்த பெண் ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில்,...

நாகை - தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்

நாகப்பட்டினம் மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லார் வடிகாலில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தூர்வாரும் பணிக்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இதன் மூலம் 4...

வரும் கல்வியாண்டில் இருந்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் நிறுத்தம் - பள்ளிக் கல்வித்துறை

வரும் கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியிலிருந்து கற்பிக்கப்படும் டெய்லரிங், பியூட்டிஷன், உள்ளிட்ட பிரிவுகள் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 5 பாடங்களே...

உலக புகையிலை ஒழிப்பு தினம் - பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட மணற்சிற்பம்..!

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இதையடுத்து புகையிலை பழக்கத்தில் இருந்து வெளிவருவதற்கான Quit...

கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்குவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்குவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வாரம் 19 குழந்தைகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து கனடாவில் நேற்று இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால் புதிய நடவடிக்கைகள் தேவை என ஜஸ்டின்...

இது என்ன புதுசா இருக்கு?... ஒட்டகத்தை பயன்படுத்தி மணல் கடத்தல்..!

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒட்டகத்தை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். மரவ மங்கலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். அதனை மாட்டு வண்டியில்...

சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய யானை.!

நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை யானை ஒன்று துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது. வனப்பகுதிக்குள் சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் அங்கிருந்த யானைகளை கண்டு ரசித்தனர். அப்போது திடீரென ஒரு யானை, வாகனத்தை துரத்தி...

நேபாளம் விமான விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்களும் மீட்பு

நேபாளத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொக்காரோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக 9 என்.ஏ.இ.டி விமானம் நேற்று முன்தினம் 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 4...