​​
Polimer News
Polimer News Tamil.

சிறிய விமானம் கரடுமுடனான நிலப்பரப்பில் விழுந்து விபத்து.. விமானத்தில் பயணித்த 4 பேர் சடலமாக மீட்பு..!

குரோஷியா நாட்டில் சிறிய விமானம், கரடுமுரடான நிலப்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ப்லிட் நகரத்தில் இருந்து ஜெர்மனி நோக்கி புறப்பட்ட செஸ்னா நிறுவனத்தின் விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தின் ரேடார் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில்,...

ஷாங்காய் நகரம் நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என அறிவிப்பு

கொரோனா தொற்றால் முடக்கப்பட்டுள்ள சீனாவின் ஷாங்காய் நகரம் நாளை முதல் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரத்தில் நாளை முதல் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் முழுமையாக தொடங்கும் என துணை மேயர் சோங் மிங்...

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினம்.. மரக்கன்று நட்டு துக்கம் அனுசரித்த அதிபர் ஜோ பைடன்..!

அமெரிக்காவில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். பைடன் உட்பட அனைவரும்...

தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. பெண் உட்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காரும்- தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட கார், ஆயில்பட்டியில் முன் சென்ற காரை முந்த முயன்ற...

தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள 27 பக்க அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அதிகளவில் போதைப்பொருள் அனுப்பப்படுவதாகவும், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் லஷ்கர் - இ...

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளதால் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 10...

மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து நிர்மலா சீதாராமன் போட்டி

மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் கர்நாடகாவில் இருந்து 2-வது முறையாக போட்டியிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பலரும் அப்போது உடனிருந்தனர். தமிழகம்,...

ஜூன் 2-ம் தேதி பாஜகவில் இணைகிறார் ஹர்திக் பட்டேல்

ஜூன் 2-ம் தேதி பாஜகவில் இணைய இருப்பதாக காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார். குஜராத்தின் காங்கிரஸ் முகங்களில் ஒருவராக இருந்துவந்த ஹர்திக் படேல் சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வந்த நிலையில்...

பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் தொலைத்தூரக்கல்வி படிப்புகள் செல்லாது - UGC

பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் தொலைத்தூரக்கல்வி படிப்புகள் செல்லாது என UGC அறிவித்துள்ளது.  உரிய முன் அனுமதி பெறாமல் தொலைதூரக்கல்வி, ஆன்லைன் படிப்புகளை நடத்தி வருவதால், இதுகுறித்து விசாரிக்குமாறு ஆளுநருக்கும், உயர்கல்வித்துறை செயலாளருக்கும் UGC கடிதம் எழுதியுள்ள நிலையில், மாணவர்களையும் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும்...

காஷ்மீரில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஆசிரியை தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோபால்போரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதில் சம்பாவைச் சேர்ந்த 36 வயதான...