​​
Polimer News
Polimer News Tamil.

சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் மூசே வாலா உடலுக்கு இறுதிச் சடங்கு... ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி...

பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வலாவின் இறுதிசடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 29-ம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்ட காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூஸ்வலாவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட  மூஸ்வலாவின் உடல்,  அவரது...

“இன்னும் 20 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும்” - அண்ணாமலை கெடு

இன்னும் 20 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால், மாவட்டம்தோறும் அறவழியில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்காக சென்னை எழும்பூரில்...

எகிப்தில் அகழ் வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை வெளியிட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.!

எகிப்து தலைநகர் கெய்ரோவின் சக்காரா நெக்ரோபோலிஸில் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏப்ரல் 2018-ல் நடந்த அகழ்வராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 250 சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள், 150 பழங்கால கடவுள்கள், தெய்வங்களின் வெண்கல சிலைகள் பிற தொல்பொருட்களை பொது மக்கள் பார்வைக்காக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்...

பிறந்த நாளை இறந்த நாளாக்கிய குடிகார கூட்டாளீஸ்..!

பிறந்தநாளை கொண்டாடும் விதமாக  நண்பர்களுக்கு மது விருந்து அளித்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அலமாதி ஏரிக்குள் அரங்கேறி இருக்கின்றது. பிறந்த நாளை இறந்த நாளாக்கிய ஓசிக்குடி கூட்டாளிகள் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... திருவள்ளூர் மாவட்டம்...

சாலையில் குளித்து துணி துவைத்து கொந்தளித்த டெரர் பாய்ஸ்..! தாமிரபரணி குடிநீர் குழாயில் ஓட்டை

தாமிரபரணி கூட்டுகுடி நீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாவதை தடுக்க கோரி சாலையில் தேங்கிய நீரில் இரு இளைஞர்கள் துணி துவைத்து குளித்து ஓட்டையை அடைக்க நூதனமாக வலியுறுத்தி உள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை - சங்கரண்கோவில் இடையே அமைந்துள்ளது சேர்ந்தமரம்...

தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி ஒருவர் UPSC தேர்வில் 338வது இடம் பிடித்துள்ளார். மைக்கேல்பட்டி கிராமத்தில் பள்ளிக்கு செல்லாத தந்தை, ஆரம்ப கல்வியை நிறைவு செய்யாத தாயாருக்கு மகளாகப் பிறந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா. சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வேளாண்...

புதிய கல்விக் கொள்கையை படித்து புரிந்த பிறகு தான் அதனை எதிர்க்கிறோம் - அமைச்சர் பொன்முடி

புதிய கல்விக் கொள்கையை பலரும் படிக்காமல் எதிர்த்து வருவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்த நிலையில், அதனை ஆழ்ந்து படித்து விட்டு தான் தாங்கள் கருத்து தெரிவிப்பதாக அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். சென்னை நந்தனம் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றப்பின்...

மாங்காட்டில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை மீட்ட போலீசார்... 10 பேர் கைது.. சொகுசு கார் பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை சேலத்தில் மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர். கோவூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை நேற்று மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்திமுனையில் கை, கால்களை...

8 ஆண்டுகளில் தன்னை ஒரு முறைகூட பிரதமராக நினைத்ததில்லை.. பிரதமர் மோடி பேச்சு

130 கோடி மக்களின் முதன்மை சேவகனாகவே தம்மை கருதுவதாகவும்,  மக்களுக்காக்கவே தமது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற மத்திய பா.ஜ.க அரசின் எட்டாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் வறுமை நிலை...

அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம்.!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அவருக்கு 80 வயது தொடங்க இருப்பதை முன்னிட்டு நேற்று மாலை நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள், யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு...