​​
Polimer News
Polimer News Tamil.

தென்காசியில் ஒரே பதிவெண் கொண்டு இயங்கி வந்த 2 சரக்கு லாரிகள் பறிமுதல்.!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஒரே பதிவெண் கொண்டு இயங்கி வந்த 2 சரக்கு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மாதாபுரம் பகுதியில் TN75 A 7651 என்ற பதிவு எண் கொண்ட 2 லாரிகளை பிடித்த போலீசார், காவல் நிலையம் கொண்டு...

'தல' டோனி மீது மோசடி வழக்கு.. போலீசார் அதிரடி..!

கிரிக்கெட் வீரர் டோனியை சேர்மனாக கொண்டு இயங்கும் உர நிறுவனம் வழங்கிய 30 லட்சம் ரூபாய் காசோலை பணமில்லாமல் திரும்பியதால், டோனி மீது போலீசார் செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். பீகாரை சேர்ந்த DS Enterprises என்ற நிறுவனம், கிரிக்கெட் வீரர்...

கொல்கத்தாவில் உயிரிழந்த பாடகர் கே.கேயின் உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச் சடங்கு.!

கொல்கத்தாவில் உயிரிழந்த பாடகர் கே.கேயின் உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. கே.கே.வின் உடற்கூராய்வு அறிக்கையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாகவே கே.கேவுக்கு நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது. கொல்கத்தா இசை நிகழ்ச்சியில்...

இளையராஜாவின் 80 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. அன்னக்கிளியில் தொடங்கி காலம் கடந்து நிலைத்த இசைப்பயணம்..!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 80வது பிறந்தநாள். 40 ஆண்டுகளாக திரையுலகில் இனிமையான பாடல்களை வழங்கிய இசைஞானி குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் வந்த போது மச்சானைப் பார்த்தீங்களா பாட்டு பட்டி தொட்டி எல்லாம் ஒலித்து ஒரு...

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது.!

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்....

டெல்லியில் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோரின் கிட்னியை அபகரித்து விலை பேசிய கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது.!

டெல்லியில் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோரின் கிட்னியை அபகரித்து விலை பேசிய கும்பலைச் சேர்ந்த 10 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பணத்தேவை அதிகமாக உள்ள ஏழைகளை ஆசை வார்த்தை காட்டி அழைத்து வந்து கிட்னி ஆபரேசன் செய்து அவர்களின் கிட்னியை பல...

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக பதிவு.!

சீனா சிஸ்வான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக நில நடுக்கம் பதிவானது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர்...

அரசு இ-சந்தை கொள்முதல் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்..!

கூட்டுறவு அமைப்புகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய உதவும் வகையில், அரசு இ-சந்தை கொள்முதல் விரிவாக்கத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம்...

ராஜஸ்தானில் இளைஞர் கொல்லப்பட்ட நிகழ்வை தொடர்ந்து நகரில் பதற்றமான சூழல் .. போலீசார் மீது கல்வீச்சு.!

ராஜஸ்தானின் சிட்டோர்கர் பகுதியில், இளைஞர் கொல்லப்பட்ட நிகழ்வில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், போலீசார் மீது கல்வீச்சு நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிட்டோர்கர் பகுதியில் முன்னாள் பாஜக கவுன்சிலரின் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால் பதற்றத்தை தவிர்க்க,...

கல்விக்காக உலக அளவிலான புதிய செயலி தொடக்கம் - கங்குலி

கல்விக்காக உலக அளவிலான புதிய செயலியை தொடங்கி இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். நிறைய மக்களுக்கு உதவும் வகையில் புதியதாக ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் மாலையில் அவர் வெளியிட்ட அறிக்கை பல ஊகங்களை...