​​
Polimer News
Polimer News Tamil.

தந்தூரி சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு.. கெட்டுப்போன சிக்கன்.. உணவகங்களில் அதிரடி ரெய்டு..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருமுருகன் என்ற அந்த மாணவர் கடந்த 24ம் தேதி 5 ஸ்டார் எலைட் என்ற ஓட்டலில்...

மாநிலங்களவைத் தேர்தல்: சத்தீஸ்கருக்கு அழைத்து செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள்..!

மாநிலங்களவைத் தேர்தலில் அரியானா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களிப்பதைத் தடுக்க அவர்களைச் சொகுசுப் பேருந்தில் ஏற்றிச் சத்தீஸ்கருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அரியானாவில் மாநிலங்களவைக்கு 2 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸ், சுயேச்சை என 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெறத் தேவையான...

சுமார் 4.69 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி.!

மலேசியா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் 4 லட்சத்து 69 ஆயிரம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் 14 ஆம் தேதி கோதுமை...

3.5 கி.மீ. நீள ஓடுபாதை.. சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப் புதிய திட்டம் தயார்..!

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டம் தயாராகியுள்ளதாகவும், விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் சென்றுவர வசதியாக விமான நிலையம் அமைக்கக் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு...

உத்தரப் பிரதேசத்தில் திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாக யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!

சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் கேளிக்கை வரி விலக்களிப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அக்சய் குமார் - மனுசி சில்லார் நடித்த வரலாற்றுத் திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், லக்னோவில் படத்தின் சிறப்புக் காட்சியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும்,...

கடும் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதி.. ஆழமான வறண்ட கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்!

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி பகுதியில் உள்ள குசியா கிராமத்தில் கடும் வறட்சி காரணமாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆழமான கிணற்றில் இறங்கி பெண்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவதாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள்,...

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராவார் என அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, சோனியா காந்திக்கு லேசான காய்ச்சலும், சில அறிகுறிகளும்...

மர்மநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்... பார்க்க, கேட்க, உணர முடியாமல் போகுமா?

இளமை பருவத்தில் நரம்பு மண்டல பன்மைத்தழும்புகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 27 வயது பட்டதாரி இளம் பெண் ஒருவர் அந்த நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். நமது உடலில் மூளையும், முதுகு தண்டுவமும் மிக மிக...

இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் இரங்கல்.!

இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அஞ்சலை பொன்னுசாமியின் மறைவு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து...

கடன் பிரச்சனையால் நகை மதிப்பீட்டாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் பிரச்சனையால் நகை மதிப்பீட்டாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கி நகை மதிப்பீட்டாளரான ரமேஷ், காலை போனை எடுக்காததாலும் அவரது...