​​
Polimer News
Polimer News Tamil.

தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு.. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்!

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு சித்த...

மோப்ப நாய் படைப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய் லூசிக்கு பணி நிறைவு விழா

வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவில் சுமார் 11 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்த மோப்ப நாய் லூசிக்கு காவல் துறையினர் பணி நிறைவு விழா கொண்டாடினர். வெடிகுண்டு சோதனை செய்வதில் பல சாதனைகளை புரிந்த லூசி நேற்று முன் தினம்...

424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் - பஞ்சாப் அரசு

பஞ்சாபில் 424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 425 விஐபிகளுக்குப் பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற மறுநாளே காங்கிரசைச் சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா வாகனத்தில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கான பாதுகாப்பைத் திரும்பப் பெற்றதும், அதை வெளிப்படையாக...

நல்லா இருப்பீங்க உள்ள வராதீங்க.. கும்பிட்டு தடுத்த பெண்கள்.! கணபதி சில்க்ஸ் காதல் கதை.!

தேனி கணபதி சில்க்ஸ் உரிமையாளர் மகன் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியர் கடைக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து சக பெண் ஊழியர்கள் கையெடுத்து கும்பிட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புகார் கூறிய பெண் போலீசார் உதவியுடன் கடைக்குள் அமர்ந்து...

கணவருடன் கருத்து வேறுபாட்டால் தாய் வீட்டிற்கு வந்த மகள்.. மனைவி, மகளை கட்டையால் அடித்து கொன்ற தந்தை.!

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில், திருமணமான இருபதே நாட்களில் கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாகப் பேசிய தாயாரையும், தந்தை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மே மாதம் 8ந் தேதி திருமணமாகி கணவர்...

இலங்கையில் அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிப்பு

இலங்கையில் அனைத்து அரசு அலுவலகங்களும் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இந்த வாரம் முதல் திங்கள்...

100வது நாளை எட்டிய போர்.. உக்ரைனை ஒரு போதும் கைப்பற்ற முடியாது என அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு.!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டு மக்களிடம் நிகழ்த்திய உரையில், ஆதரவற்ற இல்லங்களில் இருந்தும் பெற்றோர்களிடம் இருந்தும்...

மக்களுக்கு பயனளிக்கும் புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் - முதலமைச்சர்

மக்களுக்கு பயனளிக்கும் புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் துறைச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், குடிநீர் வசதி, ஊரக வீட்டு...

கல்வி அமைச்சர்களுக்கான தேசிய மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்தது தவறு - பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், தேசிய சராசரியை விட குறைந்துள்ளதாகவும், கல்வியின் தரத்தை உயர்த்துமாறு முதலமைச்சர் செயல்பட வேண்டுமென்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட அண்ணாமலை, கல்வி அமைச்சர்களுக்கான தேசிய  மாநாட்டை தமிழக...

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழரை விழுக்காடாக இருக்கும்-எஸ்பிஐ ஆராய்ச்சிப் பிரிவு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழரை விழுக்காடாக இருக்கும் என எஸ்பிஐ ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 147 இலட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், இதனால் 8 புள்ளி 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி...