​​
Polimer News
Polimer News Tamil.

தூய்மை பாரத திட்டத்தின் கழிப்பறைகளை கட்டாமல் அரசு பணம் கையாடல்.. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு!

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் ஊராட்சியில் கழிப்பறைகளை கட்டாமல் அரசு பணத்தை கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டு...

வடபழனி யா மொய்தீன் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!

சென்னையில் உள்ள யா மொய்தீன் உணவகத்தில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அங்கிருந்த கெட்டுப்போன இறைச்சிகளை கைப்பறியதுடன், சமையலறையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர். வாடிக்கையாளர்களின் புகாரை அடுத்து வடபழனியில் உள்ள அந்த உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள், சுமார் 50...

தண்ணீர் பானையில் மாட்டிக் கொண்டு வெளியேவர முடியாமல் தவித்த சிறுவன் பத்திரமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே தண்ணீர் பானையில் மாட்டிக் கொண்டு வெளியேவர முடியாமல் தவித்த சிறுவனை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பெரியசெவலை கிராமத்தில் யஸ்வந்த் என்ற 3 வயது சிறுவன், வீட்டில் விளையாடிய போது பானைக்குள்ளே இறங்கிய நிலையில், அதில் சிக்கிக் கொண்டான்....

இந்தியா, இஸ்ரேல் இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை.!

எதிர்கால தொழில்நுட்பங்கங்களுடன் இணைந்து ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியா, இஸ்ரேல் இடையே கையெழுத்தாகி இருக்கிறது. டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்ஜமின் கன்ட்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது இதற்கான தொலைநோக்கு திட்டம் முடிவு...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. பள்ளிக்கூடங்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளை ரஷ்யா குறிவைத்து தாக்குவது போர் குற்றம் என குற்றஞ்சாட்டிய உக்ரைன் அரசு மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறியுள்ளது. கடந்த மாதம்...

உக்ரைன் - ரஷ்யா போரால் உலகில் உணவு பற்றாக்குறை ஏற்படும் - ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை!

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றும் இது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். ஸ்வீடனில் அந்நாட்டு பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை முன்பு முந்திச் செல்ல முயன்றவர் கைது

சென்னையில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தின் மூலம் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் கைது செய்தனர். காமராஜர் சாலையில் முதலமைச்சர் அவரது பாதுகாப்பு வாகனத்துடன் சென்றபோது திடீரென அஜித் குமார் என்பவர், இருசக்கர வாகனத்தில் குறுக்கே வந்து முந்திச் செல்ல...

உணவுக்கழிவுகளை சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்

உணவுக் கழிவுகளை கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகியோர் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். உலகின் முதன் முறையாக உணவுக் கழிவுகளிலிருந்து சிமென்ட் தயாரிக்கும்...

தாலிபான்கள் ஆட்சிக்கு பின் முதன் முறையாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதிகள் குழு ஆப்கான் பயணம்!

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதன்முறையாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதிகள் குழு ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது. அந்நாட்டிற்கு இந்தியாவிலிருந்து வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் குறித்து தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜே.பி.சிங் தலைமையிலான குழு காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. மனிதாபிமான...

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தள்ளுமுள்ளு

தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி பிரச்சனை காரணமாக இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்டத்தின் போது கட்சியை பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான முத்துவிஜயா...