​​
Polimer News
Polimer News Tamil.

டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தின் வனப்பகுதியில் மரத்தில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு.!

டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தின் வனப்பகுதியில் மரத்தில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்ற சில மாணவர்கள் மரத்தில் சடலமாக ஒருவர் தொங்குவதை போலீசாருக்குத் தெரிவித்துள்ளனர். சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்...

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்ட 18 வயது பூர்த்தியாகாத முக்கியப் பிரமுகரின் மகன்.!

ஹைதராபாதில் பதின்பருவத்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 18 வயது பூர்த்தியாகாத முக்கியப் பிரமுகரின் மகன் உள்பட 5 பேர் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்எல்ஏ மகன் உள்பட 3...

இந்தி நடிகர் தர்மேந்திரா மும்பை தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.!

இந்தி நடிகர் தர்மேந்திரா மும்பை தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை 4 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தாம் நலமாக இருப்பதாக தர்மேந்திராவும் அவர் மனைவி ஹேமா மாலினியும் தெரிவித்துள்ளனர். வழக்கமான பரிசோதனை...

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது - முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் அரசின் ஒராண்டு நிறைவு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த சட்டம் குறித்து அரசு தனது தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் அது தொடரும் எனவும்...

கொரோனா தொற்று அதிகரிப்பால் சீனாவின் ஷாங்காய் நகரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்.!

சீனா ஷாங்காய் நகரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 2 மாதங்களுக்கு பின் கடந்த புதன்கிழமை கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து உள்ளிட்டவைகள் அனுமதி அளிக்கப்பட்டது. Jing'an மற்றும் Pudong பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவியதை அடுத்து...

கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா.. 200 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் வி.ஜி ராஜேந்திரன்.!

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 200 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் வழங்கினார். கைவாண்டூர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்து...

ஈரோட்டில் தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்ய வற்புறுத்திய தாய் உட்பட மூவர் கைது.!

ஈரோட்டில் தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்ய வற்புறுத்திய தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய ஜான் என்பவர் சூரம்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்  Big shot app மூலமாக சிறுமியின் வயதை 16ல் இருந்து...

மனைவி அடித்து கொலை.. ரூ.5 லட்சம் 75 சவரன் பெற்ற சித்த வைத்தியர்.. நம்பிய மனைவியை நாடகமாடி கொன்றார்.!

5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 75 சவரன் நகையை பெற்றுக் கொண்டு 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சித்தவைத்தியர் ஒருவர், ஒரே வருடத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை தரையில் அடித்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகி...

கோவிட் பரவல் அதிகரிப்பு- 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்.!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கண்காணிப்பை அதிகரிக்கும்படி தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.  இந்தியாவின் சில பகுதிகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவி வருவதையடுத்து 5 அம்சத் திட்டத்தைப் பின்பற்றும்படி 5 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார...

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி.!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு குறித்து கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றி வந்த ராஜவள்ளி என்பவர், பணிக்கு செல்ல ரெட்டியார்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில்...