​​
Polimer News
Polimer News Tamil.

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை பெசன்ட் நகரில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்ற அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வி.மெய்யநாதன், பொது மக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினர். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிளாஸ்டிக் பைகளை கண்டாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும் என்றார். அன்றாட வாழ்க்கையில்...

பூரி கடற்கரையில் கவனத்தைக் கவரும் மணல் சிற்பங்கள்.. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி களை கட்டிய கொண்டாட்டம்..!

உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடற்கரையை சுத்தம் செய்தல், கழிவுகளை அகற்றுதல், பசுமையை பாதுகாத்தல், புதிய மரக்கன்றுகள் நடுதல் , பச்சிலையுடன் யோகா பயிற்சி என்று பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரே பூமி என்ற பெயரில்...

உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து. 5 பேர் உடல்கருகி பலி..!

வங்காளதேசத்தில் கண்டெய்னர் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மோசமான தீக்காயங்களுடன் மீட்கபட்டனர். Sitakunda பகுதியில் உள்ள உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தின் போது 600...

குடியிருப்புகளை கபளீகரம் செய்த காட்டுத் தீ.. வீடுகளை விட்டு வெளியேறி முகாம்வாசிகளாக மாறிய மக்கள்..!

கிரீஸ் வூலா பகுதியில் குடியிருப்புகளை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயில் திரளான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் தெரிய வராத நிலையில் மலைப் பகுதிகளை சுற்றி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். 130க்கும்...

ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டில் 5-வது முறையாக விண்வெளி பயணம்.. ஈர்ப்பு விசையை இழந்து விண்ணில் மிதந்து மகிழ்ச்சி..!

அமேசான் நிறுவனர் ஜெப் பெசாசின் ப்ளூ ஆர்ஜின் நிறுவன விண்கலத்தில் 6 பேர் கொண்ட குழு விண்வெளி சுற்றுலா சென்று திரும்பியது. மேற்கு டெக்சாசில் உள்ள வான் ஹார்ன் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 106 கிலோ மீட்டர்...

உக்ரைன் கார்கீவில் தனியார் விமான நிலையத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 10 விமானங்கள் சேதம்.!

உக்ரைன் கார்கீவில் தனியார் விமான நிலையத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 10 விமானங்கள் சேதமடைந்தன. ஏவுகணை தாக்கியதில் நிலையத்தின் கொட்டகை, மற்றும் அதில் இருந்த பெரிய விமானம் எரிந்து தீக்கிரையானது. சுற்றுலா, விளையாட்டு, உள்ளிட்ட தனிப்பட்ட பயணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த...

படிச்சுட்டுதான், வேலைக்கு வந்துருக்கோம்.. மரியாதை இல்லாமல் அடிக்கிறார்கள்..!

கோவையில் ஸ்விக்கி நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில், அந்த காவலரை கைது செய்தும் பணி இடை நீக்கம் செய்தும் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  கோவை மாவட்டம் நீலாம்பூரை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான மோகன சுந்தரம்...

உத்தரப்பிரதேசத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்புரில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெடி விபத்து நிகழ்ந்த போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. வெடிவிபத்தில் பலியான 12...

சீனாவில் புல்லெட் ரயில் தடம் புரண்டு விபத்து.!

சீனாவில் புல்லெட் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தென்கிழக்கு மாகாணமான கின்யாங்கில் இருந்து கன்ங்சொவ் பகுதிக்கு,136 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. ரோங்க்ஜுகங் என்ற பகுதியில் உள்ள நிலையத்தின் சுரங்கப்பாதையில் வந்த போது 2 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில், ரயில் ஓட்டுநர்...

நேபாளத்தை தொடர்ந்து இந்தியா - பூடான் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டம்.!

நேபாளத்தை தொடர்ந்து இந்தியா - பூடான் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் Kokrajhar நகரில் இருந்து பூடான் சார்பாங் மாவட்டத்திற்கு இடையே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 57 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்க...