​​
Polimer News
Polimer News Tamil.

தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு... குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு நைஜீரியாவின் ஓவோ நகரத்தில் உள்ள தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்மநபர்கள் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் உயிரிழந்தனர். செயின்ட் ஃபிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு ஆராதனையில், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்கு புகுந்த...

வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்காவின் அலுடியன் தீவுகளில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 கி.மீ. ஆழத்தில் மையம்...

இலங்கையில் அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம்? அதிபரின் அதிகாரங்களால் தான் பொருளாதார நெருக்கடி என புகார்..!

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி...

சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 25 பேர் உயிரிழப்பு

உத்தரகண்டில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 25 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்திலிருந்து 28 பக்தர்களுடன், உத்தரகண்டின் யமுனோத்ரி நோக்கி பேருந்து புறப்பட்டு சென்றது. டாம்டா அருகே உள்ள மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...

2022-ல் நாடு முழுவதும் 9 ஆயிரம் பயணிகள் ரயில் சேவைகள் ரத்து

பராமரிப்பு பணி மற்றும் நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில்களை கூடுதலாக இயக்குவதற்கு ஏதுவாக நடப்பு ஆண்டில் 9 ஆயிரம் பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. மின் பற்றாக்குறையை தீர்க்க அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிக்க ஏதுவாக கூடுதல் சரக்கு ரயில்களை...

ரூ.36ஆயிரம் கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்கு 8 போர்க் கப்பல்கள்..!

மேக் இன் இந்தியா திட்டத்தில் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 போர்க் கப்பல்களை உள்நாட்டிலே தயாரிக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.  இந்திய கடற்படைக்காக corvette வகையை சேர்ந்த 8 போர்க் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க அனுமதி அளிப்பது குறித்து மத்திய...

அதிபரின் ஓய்வு மாளிகை அருகே பறந்த விமானம் குறித்து வெள்ளை மாளிகை விளக்கம்.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை மாளிகை மீது தகவலின்றி விமானம் பறந்த நிலையில், அதிபர் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. டெலாவேர் அருகே உள்ள ரெகோபாத் கடற்கரை பகுதியில் பைடன்,...

டூத் பிரஷ்ஷால் சிக்கிய சூப்பர் மார்க்கெட் ஊழியர்.. பல லட்ச ரூபாய் மோசடி கண்டுபிடிப்பு..!

சென்னையில் டூத் பிரஷை மாற்ற வந்த வாடிக்கையாளரால், சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற லட்சக் கணக்கான ரூபாய் பண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 40 ஆண்டுகளாக மாயா ராம் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளரான சுரேஷ்...

அடகு வைத்த நகைகள் மாயம்.. மாற்று நகை வழங்கிய வங்கி ஊழியர்கள்.. பணியிடை நீக்கம் செய்த இணைப்பதிவாளர்.!

புதுக்கோட்டை அருகே தனது சொந்த தேவைகளுக்காக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 159 புள்ளி 800 கிராம் நகைகளை கையாடல் செய்த நகை மதிப்பீட்டாளர் மற்றும் வங்கி செயலாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை...

சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.!

தூத்துக்குடி சங்கரன்கோவில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கழுந்துவிளையை சேர்ந்த பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் கடையநல்லூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். மேலநீலிதநல்லூர் வழியாக சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தி...