​​
Polimer News
Polimer News Tamil.

தெற்கு சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெற்கு சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. குவாங்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள், கட்டடங்கள் நீரில்...

கிரீஸ் கடலில் கிடந்த 23.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

சர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு மூலம் கிரீஸ் கடலில் கொட்டிக் கிடந்த வலை, பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்ட 23 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. உலக பெருங்கடல் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு, கடல் மாசு தவிர்ப்பு குறித்து...

ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் மாற்றப்பட மாட்டாது - ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டில் இடம் பெறும் மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு, வேறு தலைவர்களின் படத்தைப் பயன்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூபாய் நோட்டுகளில் இப்போது உள்ள மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக...

அமைச்சரை அலுவலகத்தில் வைத்தே சுட்டு கொன்ற நீண்ட நாள் நண்பர்

டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் அவரது அலுவலகத்தில் நீண்டகால நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக Orlando Jorge Mera,என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.  நேற்று காலை தனது அலுவலகத்தில் வழக்கமான...

கடல்சார் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டம் - அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் கடல்சார் உற்பத்தி ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலையான மீன்பிடித்தல், கடலோரக் கப்பல் போக்குவரத்து மற்றும்...

அடுத்த 5 நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிர மழைக்கு வாய்ப்பு!

மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் முதல் வட மாநிலங்கள் வரை நிலவும் வலுவான தென் மேற்கு பருவக் காற்றால் அசாம்,...

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். 2020 கொரோனா முதல் அலையில் விதிமுறைகளை மீறி மது விருந்தில் கலந்து கொண்டது உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கிய போரிஸ் ஜான்சன் சொந்த கட்சி உறுப்பினர்களிடயே அதிருப்தியை சம்பாதித்தார். அவருக்கு எதிராக...

நாட்டின் முதல் புல்லட் ரயில் 2026ஆம் ஆண்டு இயக்கப்படும் - ரயில்வே அமைச்சர் நம்பிக்கை

நாட்டின் முதல் புல்லட் ரயில் கண்டிப்பாக 2026ஆம் ஆண்டு இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார். குஜராத் மாநிலம் சூரத்தில் அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்ணவ்,...

ஆந்திராவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை : 10 மாவட்டங்களில் மின்னல் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை...

காங்கோவில் கிளர்ச்சிப் படையினர் கொடூரத் தாக்குதல் - 36 பேர் உயிரிழப்பு

காங்கோவில் கிராமத்திற்குள் புகுந்து கிளர்ச்சிப்படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதூரி மாகாணத்தில் இரவில் கிராமத்திற்குள் புகுந்த கிளர்ச்சிப் படை கும்பல் பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. காங்கோ அரசுடனான போராட்டத்தில் அப்பாவி மக்களை கிளர்ச்சி படைகள் தொடர்ந்து...