​​
Polimer News
Polimer News Tamil.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த மருத்துவர் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து மருத்துவர் ஒருவர் 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். கர்னூல்- சிப்பகிரி இடையே கல்லேவாகு நீரோடையில் ஒட்டியுள்ள சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பெய்த...

ஒடிசாவில் கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்து

ஒடிசாவில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. Birasal விமான ஓடுதளத்தில் பயிற்சி விமானத்தை விமானி தரையிறக்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ஓடுபாதையை விட்டு விமானம் விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. விமானத்தின் முன்பகுதி மற்றும்...

வர்ரியா… மப்டியில் இருந்த பெண் போலீசிடம் வம்பு..! ஜெயிலுக்கு அனுப்பி வைத்த போலீஸ்

சென்னையில் இரவு பணிமுடிந்து சாதாரண உடையில் நின்ற பெண் காவலரிடம் வம்பு செய்த ரோமியோ இளைஞரையும், அவருக்கு ஆதரவாக கும்பலை அழைத்து வந்து பிரச்சனை செய்த ஆசாமியையும் போலீசார் கைது செய்தனர். சென்னை கானத்தூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பெண்...

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்த அரக்கன்..! அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றதால் ஆத்திரம்

காதல் மனைவியை , துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்து வைத்து விட்டு தப்பிச்சென்ற கணவனை போலீசார் தேடிவருகின்றனர் தெலங்கானா மாநிலம் மகபூப்நகரை சேர்ந்தவர் அனில் குமார், கடந்த 2020 ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு...

மேக் இன் இந்தியாவில் தளவாடம் : ரூ.76ஆயிரம் கோடி புதிய திட்டங்கள்!

இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவக் கொள்முதல் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் வகையில்...

இலங்கையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமென அதிகாரிகள் எச்சரிக்கை.!

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி நிலவும் இலங்கைக்கு கப்பல் மூலம் ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்து எரிபொருள் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில்,...

சிறுமியிடம் பெற்ற கருமுட்டை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை இணை இயக்குனர்.!

16 வயது சிறுமியிடம் கருமுட்டையை பெற்று விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக சேலம், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததாகவும், தவறுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சேலத்தில் பேட்டியளித்த அவர், சிறுமியிடம் இருந்து...

மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த தலைமை ஆசிரியர் கைது

சேலம் மாவட்டத்தில், செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தாரமங்கலத்தில் உள்ள அந்த தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியரான விஜயகுமார் என்பவர்...

ஆன்லைன் கடன் செயலி மூலம் 2500 ரூபாய் கடன் பெற விண்ணப்பித்த நிலையில் 35 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சொல்லி மிரட்டல்

சென்னையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர் ஆன்லைன் கடன் செயலி மூலம் 2500 ரூபாய் கடன் பெற விண்ணப்பித்த நிலையில் ஒரு வாரம் கழித்து 35 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சொல்லி மிரட்டியதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செயலி மூலம்...

மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற நபர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். வாகைத்தாவூர் கிராமத்தை சேர்ந்த சந்தனக்குமார் என்ற அந்த நபர் குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனதால் அவரது மனைவி ஜெயா தனது இரு குழந்தைகளுடன் தந்தை...