​​
Polimer News
Polimer News Tamil.

3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம்.. மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு ரேஷன் கடைகளை திறக்க கூட்டுறவுத்துறை உத்தரவு..!

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதிக்காத வகையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு...

அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு கத்திக்குத்து

நாகப்பட்டினத்தில் அரசு பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேளாங்கண்ணி சுற்றுலா முடிந்து அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தவர்களுக்கும், நடத்துனருக்கும் இடையே பயணச்சீட்டு வழங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நடத்துனரை பயணிகளில் இருவர் தாக்கியதாகவும், நடத்துனருக்கு...

ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட் கைது

பஞ்சாப்பில் முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட்டை ஊழல் வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அம்ரீந்தர் சிங் ஆட்சியின் போது வனத்துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சாது சிங் தரம்சோட் மற்றும் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றிய...

பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஐம்மு காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

பாகிஸ்தானில் இருந்து ஐம்மு காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. நேற்றிரவு 11 மணியளவில் கனாச்சக் தயாரன் பகுதியில் டிரோன் ஒன்று பறந்து வந்த நிலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் அதனை சுட்டுவீழ்த்தினர். அந்த டிரோனில் குழந்தைகளுக்கான டிபன்...

ஓமந்தூரார் அரசினர் வளாகம் அருகே செவிலியர்கள் திடீர் போராட்டம்

மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் 300க்கும் மேற்பட்டோர், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2015ம் ஆண்டு முதல் அரசு நடத்தக்கூடிய தேர்வில்...

தம் கட்டி கூவியும் ஒரு பயலும் எழுந்திருக்கல... ச்சை.... ஊராடா இது.. ? சேவல் சோகங்கள்

அதிகாலை வரை அயர்ந்து தூங்குவோரை கூவி எழுப்பும் சேவல் ஒன்று. மூச்சுப்பிடித்து 'தம்' கட்டி கூவி அழைத்ததால், நிற்க இயலாமல் அப்படியே தரையில் பொத்தென்று விழும் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. சேவல் மூச்சு விடாமல் கூவினாலும் ஒருவரை கூட அங்கு காணவில்லை....

4 நாட்கள் வேலை வாரம் திட்டம் இங்கிலாந்தில் அமல்

நான்கு நாட்கள் வேலை வாரம் திட்டத்தை சோதனை அடிப்படையில் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தி உள்ளது. 70 நிறுவனங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்து 300 தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலை வாரத் திட்ட சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், மன அழுத்தம்,...

எவரெஸ்ட் மலைச்சிகரம் உள்ளிட்ட 4 மலைகளில் இருந்து சுமார் 34 டன் அளவிலான கழிவுகள் அகற்றம்

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச்சிகரம் உள்ளிட்ட 4 மலைகளில் இருந்து சுமார் 34 டன் அளவிலான கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. நேபாள ராணுவத்தைச் சேர்ந்த குழுவினர் மலைச் சிகரங்களில் தூய்மைப் பணியை ஏப்ரல் மாதம் 5-ந்தேதி தொடங்கிய நிலையில்,...

இந்தியா அனுப்பிய மருந்துப் பொருட்கள் இலங்கையில் விநியோகம்

தமிழகத்தில் இருந்து அனுப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் பொருட்கள் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டன. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 25 டன் மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பியது. உயிர் காக்கும் மருந்துகள்,...

பெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பொது இடங்களில் 'மாஸ்க்' கட்டாயம்

பெங்களூருவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவில் ஒரு நாள் பாதிப்பு 200-க்கும் மேற்பட்டோருக்கு உறுதியாகி உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு...