​​
Polimer News
Polimer News Tamil.

டூவீலர் விபத்தில் சிக்கி காயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலன்றி உயிரிழப்பு

சேலத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி, விபத்தில் சிக்கி பின்னந்தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஜெக்சன் சாம் சீலன் என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். கடந்த 9ஆம் தேதி தனது நண்பர்...

ஆத்தூர் சிறையில் கைதிகளுக்குள் மோதலை தடுக்க தவறிய காவலர்கள் பணியிடை நீக்கம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறை தடுக்கத் தவறியதாக இரவுப் பணியில் இருந்த முதல் நிலை தலைமை காவலர் செந்தில்குமார் மற்றும் இரண்டாம் நிலை காவலர் ராஜவர்மன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். செவ்வாய் கிழமை இரவு சதுரங்கம் விளையாடி...

திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நிமிடத்தில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறும் வகையில் ஸ்ரீவாணி தரிசன  டிக்கெட் மையம் திறக்கப்பட்டு உள்ளது. புதிய மையத்தை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி  சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்து,  பக்தர்களிடம் விவரம் பெற்று ...

கிண்டி காவல்துறையினர் 24 மணிநேரமும் பணியில் உள்ளனர்... மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை - அமைச்சர்

கிண்டி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்றும் கத்தியால் குத்திய இளைஞர் நோயாளி போல வந்ததால் தாக்குதலை தடுக்கமுடியவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர், கத்திக்குத்துக்கு ஆளான புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு மருத்துவர் பாலாஜி...

நாதக பிரமுகரை தாக்கியதாக தி.மு.க நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்ட மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதாக திமுகவை சேர்ந்த, நகர்மன்ற தலைவர் நசீர் உள்பட 15 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை அதிகாலை அண்ணாசிலை...

இரவில் தெருவிளக்கு சரியாக எரியாததால் மாடு மீது மோதியவருக்கு படுகாயம்

மணலியில் தெருவிளக்குகள் சரியாக எரியாததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையில் நின்ற மாட்டின் மீது மோதியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மணலி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் பணிமுடித்துவிட்டு இரவில் வீடு திரும்பியபோது எம்.ஜி.ஆர் நகர்...

தென்காசி நகரப் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபடும் முகமூடி கொள்ளையர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு தேடி வரும் போலீசார்

தென்காசி நகரப் பகுதியில் இரவு நேரங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் முகமூடி கொள்ளையர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். சக்திநகர் பகுதியில் வசிக்கும் மலைச்சாமி என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக் காணாமல் போனதாக புகார்...

சென்னை திருவொற்றியூர் விக்டரி பள்ளியில் வாயுக்கசிவு எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு திறப்பு

சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவால் மூடப்பட்ட விக்டரி மேல்நிலைப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளன. கடந்த 4தேதி பள்ளியில் இருந்த 8 மாணவிகள் வாயுக் கசிவால் மயக்கமடைந்தாகக் கூறப்பட்ட நிலையில், மாசுக்...

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்

தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை கிண்டி அரசு மருத்துவமனையில், ஓ.பி.சீட்டு வாங்கிக்கொண்டு நோயாளி போல வந்த பெருங்களத்தூரைச்...

இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..

திருப்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவுமுதல் தொடர் மழை பெய்து வருவதால் திருமலையில் படிக்கட்டுப் பாதை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி சுவாமி தரிசனத்துக்குச் சென்றனர். தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல்களில் பக்தர்கள் ஒதுங்கினர். திருப்பதி மலையில் வனப்பகுதியில்...