​​
Polimer News
Polimer News Tamil.

கியூபாவில் ரபேல் புயல் தாக்கியதில் கடும் சேதம்

கியூபாவில் கரை கடந்த ரபேல் புயலால், தலைநகர் ஹவானா மற்றும் ஆர்ட்டிமிசா நகரங்களில்,  கடும் சேதம் ஏற்பட்டது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, சாலைகளில் போக்குவரத்து...

அமெரிக்கா கலிபோர்னியாவில் 14 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 14 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வென்ச்சுரா கவுண்டி பகுதியில் மளமளவென பரவியுள்ள தீயை அணைக்க சுமார் 800 வீரர்கள் போராடி வரும் நிலையில், மேலும் தீ பரவாமல்...

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே நடைபெற்றது. திருச்செந்தூரில் கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஆண்டவனை நோக்கி தவம் இருந்து பெறுவதற்கு அரிய வரம் பெற்ற சூரர்கள், ஆணவத்தால் செய்த அட்டூழியங்களை அடுத்து,...

உக்ரைன் விவகாரத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சு நடத்தத் தயார் - ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் விவகாரத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். சோச்சி நகரில் வால்டாய் கிளப் நடத்திய உரையாடலில் புதின் கலந்து கொண்டு பேசுகையில், உக்ரைன் நடுநிலை வகிக்காவிட்டால், அதனை பிற நாடுகள் ரஷ்யாவுக்கு...

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள விரைவில் தேசிய தீவிரவாத எதிர்ப்புக்கொள்கை கொண்டுவரப்படும் - உள்துறை அமைச்சர் அமித் ஷா

 பயங்கரவாதம் எல்லைகளற்றதாகவும், கண்ணுக்கு தெரியாததாகவும் மாறியுள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள விரைவில் தேசிய தீவிரவாத எதிர்ப்புக்கொள்கை கொண்டுவரப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய அவர், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை திறம்பட...

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் உள்ளார் - நாசா விளக்கம்

விண்வெளியில் சுனிதா வில்லியம்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நாசா அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக விளக்கமளித்துள்ளது. ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசாவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 5ஆம் தேதி...

அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் - ஜோ பைடன்

அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதன்முறையாக பேட்டியளித்த அவர், நாட்டு மக்களின் விருப்பத்தை ஏற்பதாக தெரிவித்தார்.  டிரம்ப்பை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்ததாகவும், அதிகார மாற்றத்திற்காக...

இந்திய கடற்படையின் செயல்பாடுகளை பார்வையிட்ட குடியரசு தலைவர்.!

இந்திய கடற்படையின் செயல்பாடுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவா கடல்பகுதியில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பலில் சென்ற குடியரசு தலைவர், கடற்படையினருக்கான சீருடை அணிந்திருந்தார். அரபிக் கடலில் 15 போர்...

நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட போலி சான்றிதழ் - 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கொலை வழக்கில் சிறையில் உள்ளவருக்கு ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் போலி சான்றிதழ் வழங்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டை சிறையில் உள்ள பார்த்திபன் என்பவருக்கு ஜாமின்தாரியாக நெல்லை நரசிங்கநல்லூரைச் சேர்ந்த சோலைராஜன், சுப்பையா ஆகியோர் வழங்கிய...

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த கட்சியின் மாவட்ட செயலாளரை, குருதி பாசறை தம்பி ஒருவர் குறுக்கே புகுந்து தடுத்ததால், அவரை விரட்டி விரட்டி வெளுத்த காட்சிகள் தான் இவை..! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாம்...