​​
Polimer News
Polimer News Tamil.

மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை : இ.பி.எஸ் குற்றச்சாட்டு

மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை திமுக அரசு ஒதுக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது அறிக்கையில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல...

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பா.ஜ.க மற்றும் பி.டி.பி, தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏக்கள் 2ஆவது நாளாக கைகலப்பில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம் என்று உமர் அப்துல்லா தலைமையிலான கூட்டணி அரசு தீர்மானம் நிறைவேற்றியதற்கு...

சீமானுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து.!

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய் தவெக தலைவர் விஜயை அண்மையில் சீமான் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் கடுமையாக விமர்சித்த சீமானுக்கு பிறந்த...

திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் சாலை விபத்து.!

திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கலந்துகொண்ட  மணச்சநல்லூர் எம்.எல்.ஏ மகள் திருமண விழாவிற்காக நடப்பட்ட தி.மு.க கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற நின்றுக்கொண்டிருந்த மினி லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சுமார்...

திருவாரூரில் , கனமழையால் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீர்..

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பெய்த கனமழை காரணமாக விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகம், மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சாலை ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக் கடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற...

மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட தொழிலாளி - மீட்ட சக தொழிலாளர்கள்

கேரள மாநிலம் திருச்சூர் சாவக்காடு, எடக்கள்ளியூர் பகுதியில் மின்மாற்றியில் மின்கம்பிகளை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு மின்கம்பிகளில் தொங்கியபடி உயிருக்குப் போராடி தொழிலாளியை சக தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மின்கம்பிகளை மாற்றியமைக்கும் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த...

தென்காசியில் பெண்ணின் அந்தரங்க வீடியோ வாட்ஸ் ஆப்பில் பரவவிட்ட 2 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெண்ணின் அந்தரங்க வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பரப்பிய புகாரில், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புக் குற்றச்சாட்டில் இரண்டு பேரைப் போலீசார் கைது செய்தனர். தென்காசி சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், வீடியோவை எடுத்ததாக ஐந்தாங்கட்டளையைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும்...

வி.சி.க. கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம்... பா.ம.க. வன்முறையை தூண்டுகிறது - திருமாவளவன்

கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ம.க. வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். உளுந்தூர்பேட்டையில் பேட்டியளித்த அவர், இருதரப்பும் சமூக நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் வி.சி.க.வின் விருப்பம் என்றார்....

தெற்கு கரோலினாவில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்... தேடுதல் வேட்டையில் 2,000 ஊழியர்கள்

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் யமாசி என்ற நகரில் உள்ள அல்பா ஜெனிசிஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்து, 43 குரங்குகள் தப்பியுள்ளதால் அதனைப் பிடிக்க ஆராய்ச்சி மையத்தின் 2,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தப்பிய குரங்குகள் இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால், குரங்கால் எந்த நோயும்...

அமெரிக்கா சாலைகளில் பனி மூடியதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தம்

உலகம் முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மற்றும் கொலராடோ மாகாணங்களில் பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 8,064 அடி உயரத்தில் உள்ள குளோரிட்டா மீசா என்ற பகுதியில் பனி மழை கொட்டும்...