​​
Polimer News
Polimer News Tamil.

ஊராட்சித் தலைவர் அலுவலகக் கட்டத்தின் கழிப்பிடக் கதவுகளில் இடைவெளி இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி

மயிலாடுதுறை அருகே கோமல் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் அலுவலகத்தில் கட்டப்பட்ட, புதிய ஊராட்சி செயலகத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். புதிய கட்டடத்தில் அமைந்துள்ள கழிப்பிடத்தின் கதவுகள் முறையாக அளவெடுக்காமல் மாட்டப்பட்டு, கழிப்பிடத்திற்குள் இருப்பவர் வெளியே தெரியும் வகையில் இடைவெளி உள்ளதாகவும், அதனை...

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குப் படையெடுக்கும் யானைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஓசூர் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் உணவு தேடி வரும் யானைக் கூட்டம் விவசாய...

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!

திருவண்ணாமலை அருகே காதல் மனைவியை 6 துண்டுகளாக வெட்டி டிராலி சூட்கேஸில் அடைத்து காரில் எடுத்துச்சென்று காட்டுக்குள் வீசிய கணவர் கைது செய்யப்பட்டார்.  திருவண்ணாமலை பேகோபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி, கவுன்சிலர் ஒருவரிடம் கார் ஓட்டுனராக வேலைப்பார்த்தவர் தற்போது பைனான்ஸ் தொழில் செய்து...

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே கல்லூரி மாணவிகள் முன்பாக இருசக்கரவாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பைக்கில் வீலிங் சாகசம் செய்த கல்லூரி மாணவருக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார் அவரது தலைமுடியையும் சரியாக வெட்டச்செய்து புத்திமதி சொல்லி வீட்டுக்கு அனுப்பி...

தூய்மைப் பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்பு.!

நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சேகர்-செல்வி தம்பதியரின் மகளான துர்கா தேர்வில் தேர்ச்சி பெற்று விருப்ப தேர்வு அடிப்படையில் நகராட்சி ஆணையர்...

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் வெற்றி.!

தனது முதல் பெரிய போட்டியான சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் தெரிவித்தார்.  போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.விளையாடிய போட்டிகளில் அர்ஜுன் எரிகேசியுடன் மோதிய போட்டி சவாலாக இருந்தது.இறுதி போட்டியில் யார்வந்தாலும்...

குளத்தில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!

சென்னை செம்மஞ்சேரியில், படிக்கட்டில் படர்ந்திருந்த பாசி வழுக்கி, குளத்தில் விழுந்த பொறியியல் கல்லூரி மாணவர் பொன் ஜெயந்த் நீரில் மூழ்கி உயிரிழந்தார். செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை நண்பர்களோடு விளையாடிவிட்டு சாரய...

செல்லூரில் சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி.!

மதுரை மாவட்டம், செல்லூரில் குலமங்கலம் சாலை அருகே 11 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கடந்த மாதம் கொட்டித் தீர்த்த கனமழையால் கண்மாய்கள் நிரம்பி...

மனைவியை கொன்ற கணவன் - 11 ஆண்டுகளுக்கு பிறகு பிடித்த போலீசார்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனைவியை கொலை செய்து விட்டு டெல்லியில் பதுங்கியிருந்தவரை 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர். நெல்லையைச் சேர்ந்த செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்த பானிபூரி வியாபாரியான சுரேஷ் ஷா,  2013-ம் ஆண்டு அவரை கொலை...

திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக புகார்..

திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலையில் உரங்களை விற்பனை செய்த புகாரில் சிக்கிய 14 தனியார் கடைகள் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்துறை பொறுப்பு இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பதோடு, இணை பொருட்களை...