​​
Polimer News
Polimer News Tamil.

இருசக்கரவாகனத்தில் சென்ற பெண்களை முந்த முயன்ற லாரி இடித்து விபத்து

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பெண்களை முந்த முயன்ற டிரெய்லர் லாரி மோதிய விபத்தில், இருவரும் லாரி சக்கரங்களுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளனன. ஆதாரம்பாளையம் பகுதியிலுள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி,...

மாதிரி வாக்காளர் பட்டியலில் 3 வயது சிறுமி பெயர்

தெலங்கானா மாநிலத்தில் வெளியிடப்பட்ட மாதிரி வாக்காளர் பட்டியலில் எல்கேஜி படிக்கும் 3 வயது சிறுமியை அதிகாரிகள் சேர்த்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில்  விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் கரிம்நகர் மாவட்டம் கரீம்நகரை...

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகத்திற்காக பரஸ்பரம் சந்தைகளை அணுகுவது எளிதாகும்

இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக உடன்பாடுகளை எட்டும் தறுவாயில் இருப்பதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிறிங்கலா கூறியுள்ளார். கடந்த செப்டம்பரில் நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என...

ரோஹிங்கியர்களை வெளியேற்றுவதே அடுத்த இலக்கு

மியான்மரில் இருந்து இந்தியாவில் குடியேறிய ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் ஜிந்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே காஷ்மீரில் அமலுக்கு வந்து...

தேர்தல் முடிவைப் பார்த்த பின்னர் அதிமுக நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவைப் பார்த்த பின்னர், அதிமுகவினர் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் திமுக இளைஞரணியின் மாநகர மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது....

தேர்தலில் தோல்வியடைந்தோர் வாக்காளர்களுக்கு மிரட்டல்? கோழி ரத்தத்தில் சத்தியம் செய்ய சொன்னதால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள்,  பணம் பெற்ற கிராம மக்களை அழைத்துவந்து தங்களுக்குதான் வாக்களித்தோம் என கோழி ரத்தத்தில் சத்தியமிடுமாறு மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அரியகுடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 4 பெண்கள்...

கோவிலையும் விட்டு வைக்காத காதலர்கள்..

தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் காதலர்கள் சிலர், கோவில் பிரகாரங்களில் அமர்ந்து  காதல் சேட்டைகளில் ஈடுபடுவதாக பக்தர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இக்கோவிலுக்கு, நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலின் உள் சுற்று பிரகார...

10 ரூபாய்க்கு சாப்பாடு..! மகாராஷ்டிராவின் அம்மா உணவகம்

தமிழகத்தின் அம்மா உணவகம் போன்று மலிவு விலையில் சாப்பாடு வழங்கும் திட்டத்தை மகாராஷ்ட்ரா மாநில அரசும் தொடங்குகிறது. இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய  அந்த மாநில அரசின் முதன்மை செயலாளர் மகேஷ் பாதக், மக்களுக்கு பத்து ரூபாய் விலையில் மலிவு விலை...

சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதலமைச்சர் நேரில் ஆஜராக உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணையில், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள், ஒவ்வொரு...

சென்னையில் பனி மூட்டத்தால் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னையில் பனி மூட்டம் காரணமாக 2-வது நாளாக விமான சேவை பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் நேற்று அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் 10 விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் சென்னையில் பனி மூட்டம் காரணமாக 2-வது நாளாக...