​​
Polimer News
Polimer News Tamil.

அரிசி ஏற்றுமதியில் கடும் போட்டி..சவால் விடும் சீனா.! தாக்குப்பிடிக்குமா இந்தியா.?

விவசாய நாடான இந்தியாவின் அரசி ஏற்றுமதிக்கு கடும் சவால் விடுக்கும் வகையில் சீனா போட்டியாளராக உருவெடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாங்குபவரே திடீரென விற்பனையாளராக மாறும் போது சந்தையில் பலத்த போட்டி வரும். தற்போது அந்த சூழல் தான் ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி: உலகின் மிக...

தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று 3815 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 17 ரூபாய் விலை உயர்ந்து 3832 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போன்று நேற்று 30520 ரூபாய்க்கு விற்பனையான...

மெக்சிகோ நாட்டின் தலைநகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் முதல், சிறிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வது, சேமிப்பது, பயன்படுத்துவதும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை மீறிவோருக்கு இந்திய மதிப்பில்...

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் - சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது. அதனையொட்டி,...

குதிரையின் உதவியுடன் காட்டுத் தீயில் இருந்து உயிர் தப்பிய பெண்

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து ஒரு பெண் குதிரையின் உதவியால் உயிர் தப்பி உள்ளார். அந்நாட்டின் மோருயா நகரையும் காட்டுத் தீ விட்டு வைக்கவில்லை. ஊரை சுற்றி காட்டுத் தீ பரவியதால் அங்கு வசித்த பீசி விண்டர் என்ற பெண், தனது...

பிரியங்கா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பிரியங்கா காந்தி முன்னிலையில் மோதலில் ஈடுபட்டனர். பர்த்தாப்பூர் (Partapur) நகரில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி சென்றிருந்தார். அப்போது அவரை வரவேற்கும் விவகாரத்தில் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதற்கு காங்கிரஸ்...

மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசின் அமைச்சரவையில் பிளவு?

மகாராஷ்டிரா அமைச்சரவையிலிருந்து, சிவசேனா அமைச்சர் அப்துல் சத்தார் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசின் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவை கடந்த 30ஆம் தேதி பதவியேற்றது. அப்போது, சிவசேனாவைச் சேர்ந்த அப்துல் சத்தார் என்பவர், இணையமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், அவுரங்காபாத் மாவட்ட...

சுலைமானி உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் சுலைமானி, கொல்லப்பட்டார். அவரின் உடல்...

சூரியனில் 'ஓம்' என்ற சத்தம் கேட்பதாக கிரண் பேடி ட்வீட்

சூரியனில் 'ஓம்' என்ற சத்தம் கேட்பதை நாசா பதிவு செய்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ட்வீட் செய்துள்ளார். Click here for video: https://bit.ly/2QHbpoO சூரியனின் ஓசையை நாசா பதிவு செய்துள்ளதாக, தமது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் கிரண்பேடி இன்று காலை சிறு...

காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு - வாகன போக்குவரத்து 4வது நாளாக முடக்கம்

காஷ்மீரில் ஏற்பட்ட மண் சரிவால் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து 4 வது நாளாக முடங்கி உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு வழியாக நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையே காஷ்மீரின் முக்கிய போக்குவரத்து வழித்தடம் ஆகும். இந்த...