​​
Polimer News
Polimer News Tamil.

உலகின் மிகப் பெரிய மலர் - விஞ்ஞானிகள் ஆய்வு..!

இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவின் காட்டுக்குள் ரப்லேசியா அர்னால்டி என்ற தாவரவியல் பெயர் கொண்ட அந்த காட்டுப்பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு ராட்சத தோற்றத்தில் உள்ள அந்த பூவே, இதுவரை பூத்த மலர்களில் மிகப்பெரியது என்று...

உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 48 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு ஆணை

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக அரசு வழக்கறிஞர்கள் 48 பேரை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக அட்வகேட் ஜெனரல், 11 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர்,...

தர்பார் படத்திற்கு தேவா – அனிருத் இசை..! காப்பி சர்ச்சை முடிவு

ரஜினியின் தர்பார் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்த அனிருத், தமிழ் இசை கலைஞர்களை பயன்படுத்தாமல் புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனிருத் மீது பெப்சி அமைப்பில் புகார் அளிக்க உள்ளதாக தமிழ் இசைக்கலைஞர்கள் சங்கதலைவர் தினா தெரிவித்துள்ளார். அனிருத் மற்றும் தேவா இசையில் நடிகர்...

மனநல மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகரிக்கக் கோரி வழக்கு, மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகரிக்க கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் ரங்கநாயகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மன...

அட்லி - முருகதாஸ்..! கே.பாக்யராஜ் சூடு

தமிழ் சினிமாவில் பழைய படங்களையும் அடுத்தவர் கதைகளையும் திருடி படம் எடுத்து வரும் இளம் இயக்குனர்களை, நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ், அடிக்கடி...

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்.! ஆராய்ச்சியில் வெளியான முடிவு..

56 கிராம் எடையுள்ள கோழி முட்டை ஒன்றில் அதிகபட்சம் 80 கலோரிகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. எவ்வளவு நல்ல சத்தான உணவாக  இருந்தாலும், நாளொன்றுக்கு இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதே உண்மை. உடலுக்கு...

திருச்சுழி அருகே இரு பிரிவினர் இடையே மோதலால் போலீசார் குவிப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து சுற்றுவட்டாரத்தில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு பரளச்சியில் உள்ள அவரது சிலைக்கு செங்குளம் கிராமத்தில் இருந்து ஒரு பிரிவினர் வாகனங்களில் சென்று மாலை அணிவித்து மரியாதை...

ஆந்திர கிராமம் ஒன்றில் முதல் முறையாக தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி

ஆந்திர மாநிலத்தில் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் முதல் முறையாக தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். கர்னூல் மாவட்டத்திலுள்ள ஹோசூர் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை . இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் தலித் மக்கள் மனு அளித்தனர். காவல்துறையினர்...

7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம்  சுலைமானி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பழிவாங்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை...

ஜல்லிக்கட்டின் போது காயமடையும் காளைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை - அமைச்சர்

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காயமடையும் காளைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதுவரை 13...