​​
Polimer News
Polimer News Tamil.

கார் மோதுவதில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய குத்துச்சண்டை வீரர்

இங்கிலாந்தில் இளம் குத்துச் சண்டை வீரர் ஒருவர் கார் மோதுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லண்டனைச் சேர்ந்த ஸாக் மெக் கேப்ஸ் எனப்படும் இளைஞர் உள்ளூர் குத்துச்சண்டை போட்டியில் புகழ்பெற்றவர். இவர் டோவர் என்ற இடத்தில் கடை வீதியில் நடந்து சென்றபோது...

கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த பழமையான ரயில் நிலையக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பர்தமான் (Bardhaman) நகரில் பழைமையான ரயில் நிலையக் கட்டிடம் ஒன்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில்...

ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் இருவர் சேர்ந்து சாதுர்யமான கேட்ச்

ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இருவர் சேர்ந்து சாதுர்யமான முறையில் மேற்கொண்ட கேட்ச் ரசிகர்களைக் கவர்ந்தது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பி.பி.எல். எனப்படும் பிக் பாஷ் லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் இரு அணிகளாக எதிரெதிரே சந்தித்தனர்....

பாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க நிலைகள் மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், ஈரானில் உள்ள பழமையான, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்கள் தாக்கி அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.  ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தின் மீது அண்மையில் அமெரிக்கா ஆளில்லா...

கெயில் குழாயை சுத்தம் செய்த போது வயலில் விழுந்த ரப்பர் உருளை

நாகை மாவட்டத்தில் கெயில் நிறுவன குழாய் தூய்மைபடுத்தும் பணியின் போது ரப்பர் உருளை வயல் வெளியில் பயிர்கள் சேதமடைந்தததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் இயற்கை எரிவாயு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் குழாய் அமைத்துள்ளது. இந்த குழாயில் உள்ள...

காட்டுத் தீயில் சிக்கி பலியான உயிரினங்களை உண்ண வட்டமடிக்கும் கழுகுகள்

ஆஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்த விலங்குகள் மற்றும் சிறு உயிரினங்களை உண்பதற்காக வட்டமிடும் கழுகுகள் போர் ஏற்பட்ட பழங்காலத்தை உணர்த்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நெருப்பு அக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பற்றி எரிந்து வருகிறது....

தமிழகம் முழுவதும் 2வது நாளாக வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள், இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம்கள் ஜனவரி 4, 5 மற்றும்...

மாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்

மாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து...

பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதலில் 14 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான பர்கினா பாஸோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் மாணவர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமுள்ள அந்நாட்டின் வடக்கில் அமைந்துள்ள சோரோ பகுதியில் பயங்கரவாதிகள் சாலையில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில்...

கிளைடர் விமானத்தில் பறக்கும் போது நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்

அமெரிக்காவில் கிளைடர் விமானத்தில் பறந்தவர் கயிறுகள் அறுந்ததில் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடற்கரைப் பகுதியில் கிளைடர் விமானத்தில் பறப்பதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் கடலை ஒட்டியிருந்த சிறிய குன்றில்...