​​
Polimer News
Polimer News Tamil.

தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம்

தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னை தியாகராயநகரிலுள்ள, அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கட்சியின் மேலிடப்பிரதிநிதிகளான சிவபிரகாஷ், நரசிம்மராவ் மற்றும் எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன்,...

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ,ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.   மதுரை...

ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக அவசர முறையீடு

வாக்கு எண்ணிக்கை முறைகேடு புகார்கள் எழுந்த பகுதிகளில் வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை கோரி திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, தர்மபுரி, மன்னார்குடி, திருவள்ளூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பையொட்டி அலைமோதும் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி, பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாளை அதிகாலை 12.30 மணிக்கு வைகானஸ ஆகம முறைப்படி சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், அதிகாலை 2 முதல் 4.30 மணி வரை மத்திய-மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும், அதிகாலை...

நீட் பயிற்சி தர அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளனர் - செங்கோட்டையன்

தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே சிறுவலூர், கவுண்டம்பாளையம், பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன்...

தேர்தல் முடிவுகளில் அதிக வாக்குகள் பெற்றவர்களே வளர்பிறை - மு.க.ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளில் யார் அதிக வாக்குகள் பெற்றார்களோ அவர்கள் தான் வளர்பிறை என்றும் மற்றவர்கள் தேய்பிறை என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் கலைஞரின் சிலையை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து...

கணவர் மற்றும் ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தனது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து மும்பை விமான நிலையத்தில் கொண்டாடிய வீடியோ வைரல் ஆகிவருகிறது. இன்று தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடும் தீபிகா, லக்னோவில் உள்ள ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து...

செயற்கை முறையில் நிகழ்த்தப்பட்ட பனிச்சரிவு

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் செயற்கையான முறையில் நிகழ்த்தப்பட்ட பனிச்சரிவு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இயற்கையாக நிகழும் பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகளும் பனிச்சறுக்கு வீரர்களும் உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டு, முன்கூட்டியே வெடிபொருட்களை பயன்படுத்தி செயற்கை பனிச்சரிவு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில் லிட்டில் காட்டன்வுட் கனியன்...

மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 வைணவ  திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல்பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி...

ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 28 பேர் பலி

லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். லிபிய அதிபராக இருந்த மும்மர் கடாஃபி, 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பின் அங்கு வலுவான அரசு எதுவும் அமையவில்லை. ஐ.நா. ஆதரவு பெற்ற தேசிய...