​​
Polimer News
Polimer News Tamil.

சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது சர்வதேச பனிச்சிற்பத் திருவிழா

சீனாவில் சர்வதேச பனிச்சிற்பத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. ரஷ்யாவின் சைபீரியாவின் எல்லையை ஒட்டியுள்ள ஹார்பின் பகுதியில் தொடங்கிய இந்தத் திருவிழாவில் பல்வேறு நாடுகளின் முக்கிய கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மின்னும் விளக்கொளிகளால் பனிச்சிற்பங்கள் பொன்னென மின்னி வருகின்றன. தற்போது சுமார் 6 லட்சம்...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு..!

தமிழகத்தின் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.  தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 5 ஆயிரத்து 90 ஒன்றிய வார்டு உறுப்பினர், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித்...

வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு....

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விடிய விடியக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த...

விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி.? பிரதமர் மோடியின் முக்கிய நகர்வு..!

நாட்டில் வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி கொள்கைக்கான செயல் திட்டங்களை, தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்கள் இறுதி செய்திருப்பதாக, மத்திய அரசு கூறியிருக்கிறது. நாடுமுழுவதும் உள்ள பல்வேறு பருவநிலை கொண்ட மண்டலங்கள் இருப்பதால், அனைத்து விதமான இயற்கை வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும்...

ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் திறக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கும் கட்டடம்

ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்கள் தங்குவதற்காக 48 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் புதர் மண்டி, குடிகாரர்களின் கூடாரமாக மாறிக்கிடக்கும் கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  ராமநாதபுரம்...

டெல்லி JNU-வில் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல்

டெல்லியில், JNU என சுருங்க அழைக்கப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே, பெரும் மோதல் மூண்டது. அப்போது, அங்கு வந்த, ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவரின் மண்டை உடைந்தது. மாலை 6 மணியளவில், முகமூடி அணிந்துவந்த, மாணவர்களின்...

உ.பி.யில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கல்? இந்திய-நேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு

உத்தரப்பிரதேசத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதைத் தொடர்ந்து, இந்தியா-நேபாள எல்லையில், கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில், அப்துல் சமது, இலியாஸ் என்ற இரண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் பெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருப்பதாகவும், மத்திய, மாநில...

நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையிலேயே கூடுதலாக மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச்...

புதிதாக கட்டப்படவுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 புதிய மருத்துவக் கல்லூரிகளுடனான மருத்துவமனை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி,...