​​
Polimer News
Polimer News Tamil.

சுவாமி அய்யப்பனை தரிசிக்க பெரும் திரளாக திரண்ட பக்தர்கள்

சபரிமலையில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மூன்று நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். மகரவிளக்குக்காக சபரிமலை டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டதையடுத்து புத்தாண்டு தினத்தில் மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது....

சீன வியாபாரிகளைக் கண்டித்து ஹாங்காங்கில் போராட்டம்

ஹாங்காங்கில் சீன வியாபாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சீனாவிலிருந்து வரும் வியாபாரிகளால் ஹாங்காங்கில் சார்ஸ் வைரஸ் கிருமிகள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சீன வியாபாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷியூங் ஷுயி நகரத்தில்...

"அகரம்" மாணவியின் அனுபவம்.. கண்கலங்கிய சூர்யா..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவி ஒருவர், தனது கல்வி கனவு நனவாக தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்ததைக் கேட்டு மேடையிலிருந்த நடிகர் சூர்யா, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கண்கலங்கினர். சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்குத் தரமான...

அமெரிக்காவில் தொடர் விபத்துக்களில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஏற்பட்ட தொடர் விபத்துக்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிளஸன்ட் மவுண்ட் என்ற மலைப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பெரிய வாகனம் ஒன்று மலைப்பாதையில் கீழிறங்கியபோது பின்னால் வந்த கார்...

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பற்றி எரியும் நெருப்பில் சிக்கி கோடிக்கணக்கான உயிரினங்கள் பலியாகி உள்ள நிலையில் மனிதர்களில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கட்டுக்கடங்காமல்...

வெள்ளிப் பனிப் போர்வையால் மூடிக்கிடக்கும் ஜிலிங் ஸ்னோ மலை

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிலிங் ஸ்னோ மலை பனியால் போர்த்தப்பட்டது போலிருக்கும் காட்சி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. 5 ஆயிரத்து 353 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலையில், சராசரியாக 6 டிகிரி செல்சியஸ் முதல் 12 டிகிரி செல்சியஸ்...

இந்தியா- இலங்கை முதலாவது 20ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவது போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன்...

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து உரையாற்றுகிறார். ஆளுநர் உரையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்...

ரஷ்யாவில் பனிவெடிப்பில் சிக்கி நீருக்குள் மூழ்கிய வாகனங்கள்

ரஷ்யாவில் பனி வெடிப்பில் சிக்கி 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் மூழ்கின. விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஸ்கி தீவில் உறை பனிக்காலம் முடிவடைந்த நிலையில் அங்கு ஏராளமானோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது உருகிய பனியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. பல நூறு மீட்டர்...

குளிர்கால விடுமுறைக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்று திறப்பு

குளிர்கால விடுமுறைக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு முக்கிய வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளன. முதற்கட்டமாக அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஜம்மு-காஷ்மீருக்கு...