​​
Polimer News
Polimer News Tamil.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பாஜக விழிப்புணர்வு பரப்புரை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, இல்லங்கள் தோறும் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரை இயக்கத்தை, பாஜக முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், டெல்லி லஜ்பத் நகர் பகுதியில், வீடு, வீடாகச் சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துண்டு பிரசுரங்கள் வழங்கினார்....

தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் தி.மு.க 85 சதவீத இடங்களை வென்றிருக்கும் - ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக முறையாக நடந்திருந்தால் 85 விழுக்காடு இடங்களை திமுக பெற்றிருக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின்,...

அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

கென்யாவில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோமாலியாவை ஓட்டி உள்ள லமு கவுன்டியில் இருக்கும் மாண்டா பே தளத்தை அமெரிக்க ராணுவமும், கென்ய ராணுவம் பயன்படுத்தி...

சூடான் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களுக்கு இழப்பீடு - முதலமைச்சர் பழனிசாமி

சூடான் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி சூடான் நாட்டில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள்...

பீகாரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணி மே 15-ஆம் தேதி தொடங்கும்

பீகாரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணி மே மாதம் 15-ஆம் தேதி தொடங்கும் என அம்மாநில துணை முதலமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய மக்கள் தொகை பதிவேடு...

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். கீழத்தாழனூர் பகுதியில் உள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம். அந்த மையத்திற்குள் கடந்த 3ம் தேதி...

தமிழக பா.ஜ.க தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் - நரசிம்மராவ்

தமிழக பா.ஜ.க தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து 5 மாதங்களாக அந்த பதவி காலியாக...

சீக்கிய இளைஞர் கொலைக்கு இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் வசிக்கும் சீக்கிய சமூக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிய குரு குருநானக் பிறந்த இடமான நான்கனா சாகீப்பில் இருக்கும் குருத்வாராவில் அண்மையில் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம்...

6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து நியூசி.,வீரர் சாதனை..!

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி, சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் என்ற உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், கேண்டர்பரி அணிக்காக களமிறங்கிய லியோ கார்டர், 16ஆவது...

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் அ.தி.மு.க. அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதாடவும், நடப்பு கல்வியாண்டிலேயே நீட் தேர்வு ரத்தாக நடவடிக்கை எடுக்குமாறும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு கட்டாயம் என்ற...