​​
Polimer News
Polimer News Tamil.

அமெரிக்காவிற்கு எதிராக ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம்..!

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே போர்மூளும் சூழல் நிலவுவதால், வளைகுடா நாடுகளில்...

தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள்?

தமிழகத்தில் மேலும் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முதல்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக்...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு..

தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட  ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவில்களில் வந்து வழிபட்டனர்.  ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய...

அலையாத்தி காடுகளுக்கிடையே அழகாய் ஒரு படகுப் பயணம்..!

புதுச்சேரி சுற்றுலாத்துறையால் முருங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கப்பட்டிருக்கும் படகு போக்குவரத்து சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏராளமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய புதுச்சேரியில் புதிதாக உதயமாகி இருக்கிறது இந்த அலையாத்தி காடுகளுக்கு இடையிலான படகுப் பயணம். முருங்கம்பாக்கம் பகுதியில் பரந்து விரிந்திருக்கும் அலையாத்தி...

இயற்கை விவசாயம்.. லாபம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே துவரையை இயற்கை முறையில் பயிரிட்டு அதிக லாபம் ஈட்டி அசத்தி வருகிறார் பட்டதாரி இளைஞர் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன், பி.இ மெக்கானிக்கல் பட்டதாரி ஆவார். பட்டப்படிப்பை முடித்தவுடன் சென்னையில்...

முகமூடி அணிந்து வந்த நபர்கள் தாக்கியதில் டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் 30 பேர் படுகாயம்...விசாரணைக்கு உத்தரவு

டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு டெல்லி போலீசாருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேர்வுப் பதிவை ஒத்திவைக்க கோரியும்,...

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க அமைச்சர் தொலைபேசியில் பேச்சு

அமெரிக்காவின் வான் தாக்குதலில் ஈரானின் படைத்தளபதி சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து நிலவும் பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே வாஷிங்டனில் இந்திய தூதரை அழைத்து ஆலோசித்த போம்பியோ தொலைபேசி...

பேருந்துக்காக காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கார் மோதி விபத்து

இத்தாலியில் குடித்து கார் ஓட்டியவர் ஏற்படுத்திய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். வடக்குப் பிராந்தியத்தில் உள்ள லூடாகோ அருகில் உள்ள லட்டாச் என்ற இடத்தில் சில ஜெர்மானிய சுற்றுலா பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று...

மண் அடுப்பு, பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்..!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், திருவாரூரில் அடுப்பு, பானைகள் உள்ளிட்டவை தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான், சேமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று...

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒன்றாம்...