​​
Polimer News
Polimer News Tamil.

வழிபாட்டில் ஈடுபட்டிருந்த புத்த துறவியை சேட்டை செய்யும் பூனை

தாய்லாந்து நாட்டில் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த புத்த மத துறவியை, பூனை ஒன்று  குறுக்கீடு செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அங்குள்ள புத்த மதக் கோவில் ஒன்றில், துறவி ஒருவர் தியானம் செய்வது போல அமைதியாக அமர்ந்து புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது...

உலக வேட்டி தினம் எப்போது முதல்.? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா.!

ஜனவரி 6-ம் தேதியான இன்று உலக வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி. ஆனால் இன்றைய தலைமுறையினர் வேட்டி கட்டும் வழக்கத்தை அரிதாக்கி கொண்டுள்ளனர். பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனவரி 6 உலக...

13 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டஉள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை மதியம் 12.30 மணிக்குள்ளாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதாக 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முறையிட்டிருந்தனர். அதற்கு வாக்கு...

பூலான் தேவிக்கு எதிரான வழக்கில் 39 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

மத்தியப்பிரதேசத்தில் 20 பேரை சுட்டுக் கொன்றதாக பூலான் தேவி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 39 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பல் பள்ளதாக்கில் கொள்ளைக்காரியாக வலம் வந்து பின்னர் திருந்தி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி...

பள்ளிக்கல்வித்துறைக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள உயர்மட்டக் குழு

பள்ளிக்கல்வித்துறைக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதற்காக 4 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுகள், அரசாணைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் விசாரணைக்கு வரும் போது, துறை சார்ந்த அலுவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் தர நேர்வதால் பல்வேறு...

மத்திய கிழக்கு பதற்றம் இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர்  ஜாவத் ஷெரீபுடன் தொலைபேசியில் பேசிய அவர், இப்போது...

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது.  சட்டப்பேரவை கூடியதும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையைத் தொடங்கினார். ஆனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர். அவர்களை ஆளுநர் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது நீங்கள் மிகச்சிறந்த பேச்சாளர் என்றும், ஆளுநர்...

இந்தோனேஷியாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்த நகரத்தின் மேற்கு பகுதியான பிரிக்ஜென் கட்டாம்சோவில், கீழ் தளத்தில் கடைகளும் மேல்தளங்களில் குடியிருப்புகளையும் கொண்ட 5 அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென...

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது பாகுபாடு காட்டுவதில்லை- அமைச்சர் மறுப்பு

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சி பெருங்குழப்பத்தை ஏற்படுத்துவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, இல்லங்கள்தோறும் சென்று, துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

மகாராஷ்ட்ரா கூட்டணி அரசு விரைவில் கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்தியல் ஒற்றுமை இல்லாத காரணத்தால், கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை, மகாராஷ்டிர...