​​
Polimer News
Polimer News Tamil.

ரூ.132 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டடங்களை திறந்துவைத்தார் முதல்வர்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 36 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில், சுமார் 96 கோடி ரூபாய்...

ஜன.9 : வரை சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த முடிவு

2020ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தை அடுத்த 3 நாட்களுக்கு நடத்த, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், நாளை காலை 10 மணிக்கு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல்...

கல்லூரி வளாகங்கள் அரசியல் போர்க்களமாக மாறக்கூடாது

கல்வி வளாகங்கள், அரசியல் போர்க்களங்களாக மாறக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறி இருக்கிறார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,தாம் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த போதே இதே கருத்தை...

டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் ஐசிசியின் முடிவுக்கு அக்தர் எதிர்ப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாட்களுக்குள் நடத்தும் முறைக்கு, பிசிசிஐ தலைவர் கங்குலி ஒப்புதல் அளிக்கமாட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 5 நாட்கள் நடைபெற்றுவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை, 4 நாட்களாக குறைக்க ஐசிசி திட்டமிட்டுவரும்...

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 7 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கடலூரில் 3 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக, சென்னை,...

பதவியேற்பு நிகழ்வில் தள்ளுமுள்ளு, மோதல்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில்  மோதல், தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேறின.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சை கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திச் சென்றதாகக் கூறி...

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்பு

தமிழகத்தின் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகங்களில் பதவியேற்றுக் கொண்டனர்.  தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5 ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர்கள், 9 ஆயிரத்து 624...

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிசந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி மனுத் தாக்கல்...

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படம் வெளியாவதில் சிக்கல்

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படம், கர்நாடகாவில் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. Also Read : 70 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்க காரணம் இதுதான்.....

பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.175 கோடி மதிப்பிலான ஹெராயின்.. நடுக்கடலில் பறிமுதல்

இந்திய கடலோர காவல் படையும், குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவும் சேர்ந்து, பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை நடுக்கடலில் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தின் கட்ச் கடற்கரை வழியாக, பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்...