​​
Polimer News
Polimer News Tamil.

குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் ரத்து

பாதுகாப்பு காரணங்களால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் சபரிமலை வருகை, ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 6-ஆம் தேதி சபரிமலை கோவிலுக்கு செல்ல குடியரசுத் தலைவர் திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து ஹெலிகாப்டர் இறங்குமிடம், பாதுகாப்பு, பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் குடியரசுத் தலைவரின் வருகை சாத்தியமா...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி- மு.க.ஸ்டாலின்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதாக, மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சி ரீதியாக நடைபெற்ற பதவி இடங்களுக்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று மதியம் 2...

குடியுரிமை திருத்த சட்டம்: பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது என்று அக்கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய...

புத்தாண்டையொட்டி WhatsApp புதிய சாதனை

வாட்ஸ் அப் செயலியில், புத்தாண்டு தினத்தையொட்டி, 10 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் பரிமாரிக்கொள்ளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதியில் இருந்து புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு வரை 24 மணி நேரத்தில், உலகளவில் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான...

முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுக அமோக வெற்றி

முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 13 யை அதிமுக கைப்பற்றியுள்ளது. இதில் முதலமைச்சரின் சொந்த ஒன்றியமான எடப்பாடியில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க 3 வார்டுகளையும் கைப்பற்றி...

பொங்கல் பரிசு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்குவதற்காக 1,677 கோடி ரூபாயை யை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் 1,000 ரூபாய் வழங்கப்பட...

மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுப்பதே நோக்கம்..!

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பாடுபட உள்ளதாக, பஞ்சாயத்து தலைவியாக தேர்வான கல்லூரி மாணவி சந்தியா ராணி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சாரதியின்  மகள் சந்தியா ராணி, கர்நாடகா மாநிலம் மாலூர் அருகே...

வென்றவருக்கு பதிலாக சான்றிதழில் தோற்றவரின் பெயர் இருந்ததால் குழப்பம்

கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான சான்றிதழில் வெற்றிபெற்ற தனது பெயருக்கு பதிலாக தோற்றவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறி தேர்தலில் வென்ற பெண் வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பூட்டு சாவி...

சீனாவின் யாங்ட்சீ ஆற்றில் மீன்பிடிக்க 10 ஆண்டுகளுக்கு தடை

சீனா அரசு யாங்ட்சீ ஆற்றில் அடுத்த பத்தாண்டுகளுக்கு மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பெரிய ஆறுகளில் ஒன்றான யாங்ட்சீயில் 1950 ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 4,20,000 டன் மீன் பிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது 1 லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில்...

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு - 11 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிசௌரி மாகாணத்தில் 4 பேரும், டெக்சாஸ், புளோரிடா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் தலா 2 பேரும், அயோவா மாகாணத்தில் ஒருவரும் பலியானதாக செய்திகள் வெளியாகி...