​​
Polimer News
Polimer News Tamil.

சென்னை விமான நிலையத்தில் பனி மூட்டத்தால் 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

கடும் பனிமூட்டம் காரணமாக திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் காலை சென்னை விமான நிலையத்துக்கு கோலாலம்பூர், அபுதாபி, துபாய்,...

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேர்

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேரை அந்நாட்டு அரசு ஈடுபடுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக பற்றி எரியும் தீயால் 13 மில்லியன் ஏக்கரில் காட்டு வளம் எரிந்து நாசமாகி உள்ளது. அத்தோடு, 1000 வீடுகளையும் தீ கபளீகரம்...

தெற்கு ஆசியாவில், டெல்லியில் முதல் முறையாக ஓடும் ரயிலில் wifi வசதி

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக டெல்லி மெட்ரோ ரெயிலில் இலவச அதிவேக வைபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் செல்லும் இந்த மெட்ரோ ரெயில்...

மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்வதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து...

குயின் இணையதள தொடருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

குயின் இணையதள தொடருக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட குயின் தொடருக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகளை கருதி தடை விதிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார். நாடாளுமன்றத்...

ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்கும் திட்டத்துக்கு டி. ராஜேந்தர் வரவேற்பு

ஆன்லைன் மூலம் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் தமிழக அரசின் திட்டத்துக்கு நடிகர் டி. ராஜேந்தர் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், திரைப்படத்துறை அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும்,விரைவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து  திரைப்படத்திற்கு விதிக்கப்படும்...

தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தீர்மானம்...

ஒரே பதவிக்கு இருவர் வெற்றிப்பெற்றதாக அடுத்தடுத்து அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இருவர் வெற்றிப்பெற்றதாக அதிகாரிகள் அடுத்தடுத்து சான்றிதழ் அளித்ததால் குழப்பம் ஏற்பட்டது. சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்...

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி, இளைய விஞ்ஞானிகளின் கையில் இருப்பதாக, பிரதமர் மோடி கூறி இருக்கிறார். இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சி, புதிய பாதையில் பயணிக்க,  நவீன தொழில்நுட்பங்கள் தேவைப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் 107 ஆவது இந்திய அறிவியல் மாநாடு நடக்கிறது....

பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயார்: நரவானே

அரசு கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடத்தத் தயார் என்று புதிய தலைமை தளபதி எம்.எம்.  நரவானே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதையும், ஊடுருவல் நடக்காமல் இருப்பதையும் ராணுவம் உறுதி செய்து...