​​
Polimer News
Polimer News Tamil.

ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டது குறித்து டிரம்ப் விளக்கம்...

அமெரிக்க அதிகாரிகளை கொல்ல திட்டமிட்டதால் ஈரானின் தளபதி சுலைமானியை அமெரிக்க படையினர் கொன்றதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று அதிகாலை மீண்டும் அமெரிக்கப்படைகள் பாக்தாத்தில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிக்கிறது. ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப்...

சிங்கபெண்ணே அல்ல திருட்டுப் பெண்ணே...! டியோ களவாணிகள்

சென்னையில் இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து இருப்பது போல நடித்து டியோ ஸ்கூட்டரை கள்ளச்சாவி போட்டு களவாட முயன்ற இளம் பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வீட்டிற்கு வெளியே வீதியில் நிறுத்தப்படும் இரு சக்கரவாகனங்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள வில்லங்கம் குறித்து...

இந்திய எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவியது. பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள கிருஷ்ணா காத்தி (Krishna Ghati) பகுதியில், ராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர்.  இந்த...

இந்தோனேஷியாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

இந்தோனேஷியாவில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டில் இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தலைநகர் ஜகார்த்தாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தநிலையில், வெள்ளத்தால் கடுமையாக...

இலங்கையில் தேர்தல் மற்றும் அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் தேவை - அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் தேர்தல் மற்றும் அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உரை நிகழ்த்திய அவர், மக்களின் இறையாண்மையை காக்கும் வலிமையான சட்டங்கள் தேவை என்றார். நாடாளுமன்றத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தேர்தல் முறையில்...

விண்வெளி போல, ஆழ்கடல் ஆய்விலும் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற வேண்டும்..பிரதமர் மோடி வலியுறுத்தல்

விவசாயத்திற்கு உதவும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளில் புதிய புரட்சி ஏற்பட வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். விண்வெளியில் பெற்ற வெற்றியை போலவே ஆழ்கடல் ஆய்விலும் இந்தியா வெற்றி காண வேண்டுமென அவர் கூறியுள்ளார்.  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற 107 வது...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் பரளியாற்றில் 4 செ.மீட்டரும், தாமரைப்பாக்கத்தில் 3...

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. நெல்லையில் நடந்த குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நெல்லை கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்....

வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதப்படுத்தப்படுவதாக தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விதிகளுக்கு உட்பட்டுத்தான் தேர்தல்...

ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிமுக, திமுக கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்..!

ஊராட்சி ஒன்றிய தேர்தலில் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. டெல்டா மாவட்டங்களில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.  கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 ஒன்றியங்களில் அதிமுக 9 ஒன்றியங்களை கைப்பற்றி அசைக்க முடியாத பலத்துடன் உள்ளது....