​​
Polimer News
Polimer News Tamil.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31ந் தேதி தொடக்கம்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரை எப்போது நடத்தலாம் என்பதை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைக்கும். அதன் பின்னர் மத்திய அரசு...

சைரஸ் மிஸ்திரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா மனு

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டது முற்றிலும் தொழில்...

எல்லை தாண்டியும் தீவிரவாதிகளை அழிப்போம் - புதிய ராணுவ தளபதி எச்சரிக்கை

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் ஒரு வலுவான எச்சரிக்கையை விடுத்தது என்று ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத...

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் பயன்பாட்டை நிறுத்தி வைத்தது தைவான்

அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துக்களால் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் பயன்பாட்டை நிறுத்தி வைக்க தைவான் அரசு உத்தரவிட்டுள்ளது. தைவானின் முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 12 ராணுவ உயரதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் அண்மையில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து விமானப் படை,...

17 வயது பையன் 21 வயது பெண்ணை மணந்தால் தண்டனையா? -உச்சநீதிமன்றம் விளக்கம்

21 வயது பூர்த்தியாகாத ஒருவர் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அவரை தண்டிக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது குழந்தைத் திருமணமாக கருதப்படக்கூடாது என்றும் நீதிபதி மோகன் சந்தான கவுடர் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது....

5 மாதங்களாக தொடர்ந்து எரியும் காட்டுத் தீயில் சிக்கி 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் பலி

ஆஸ்திரேலியாவில் கடந்த 5 மாதங்களாக பற்றி எரியும் காட்டுத் தீயினால் 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் இறந்திருக்கலாம் என இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காட்டுத் தீ பற்றியெரிந்து வருகிறது. பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து எரியும் தீயைக்...

பிரதமர் மோடி தலைமையில் முழு அமைச்சரவைக் கூட்டம்

மத்திய அமைச்சரவையின் குழுக்கள் யாவும் ஒருங்கிணைந்த புத்தாண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நேற்று மாலை புதிதாக கட்டப்பட்ட குஜராத் பவன் கட்டடத்தில் நடைபெற்றது. இன்றும் காலை 9.30 மணிக்கு இக்கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற உள்ளது. நாட்டின் பொருளாதார...

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனிநல வாரியம் -புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கால்நடை பெருக்கத்தை அதிகரிக்க கால்நடை வளர்ப்பு அமைப்பு ஒன்று...

இறந்த மீனின் வயிற்றுக்குள் உயிருடன் இருந்த மற்றொரு மீன்

அமெரிக்காவில் இறந்து பலமணி நேரம் ஆன மீனின் வயிற்றில் இருந்து மற்றொரு மீன் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. விஸ்கான்சின் மாகாணத்தில் ஓடும் மிஸிஸிப்பி ஆற்றில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். பின்னர் வெகுநேரம் கழித்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பி மீன்களைப்...

அமெரிக்கா, தைவான் போர் ஒத்திகை எதிரொலி...எதிர்ப்பு தெரிவித்த சீனா

அமெரிக்கா, தைவான் இடையே போர்ப் பயிற்சி ஒத்திகை நடந்து வரும் நிலையில் இரு நாடுகளையும் எச்சரிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது தென் சீனக் கடல் பகுதியில் தைவானும், அமெரிக்காவும் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் குறிப்பிட்ட...