RECENT NEWS

சென்னையில் துப்பாக்கிகளுடன் போதைப் பொருள் சிக்கிய வழக்கு.. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபாணி இம்ரானுக்கு தொடர்பு என கியூ பிரிவு போலீசார் தகவல்

சென்னையில் துப்பாக்கிகளுடன் போதைப் பொருள் சிக்கிய வழக்கு.. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபாணி இம்ரானுக்கு தொடர்பு என கியூ பிரிவு போலீசார் தகவல்

Jan 08, 2025

தமிழ்நாடு

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய 26 குடும்பங்கள் குஸ்கா ஞானசேகரன் வீட்டை அகற்றும் அறநிலையத்துறை

Jan 08, 2025 01:41 AM

20

285

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய 26 குடும்பங்கள் குஸ்கா ஞானசேகரன் வீட்டை அகற்றும் அறநிலையத்துறை

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய 26 குடும்பங்கள் குஸ்கா ஞானசேகரன் வீட்டை அகற்றும் அறநிலையத்துறை

சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக பீப் பிரியாணிக் கடை உரிமையாளர் குஸ்கா ஞானசேகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் அவனது வீட்டில் ஆய்வு செய்து லேப்டாப் மற்றும் சொத்து ஆவணங்களை அட்டைப்பெட்டிகளில் அள்ளிச்சென்றனர் .

20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புள்ள ஞானசேகரன் அதன் மூலம் கிடைத்த பணத்தில் சொத்துக்களை வாங்கியதாகவும், வீடுகள் கட்டியதாகவும் தெரியவந்ததால் அந்த சொத்துக்களை மதிப்பீடு செய்து , அவற்றை கைப்பற்றி வழக்கில் சேர்ப்பதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர்

இதில் ஞானசேகரன் இரு மனைவிகளுடன் வசித்து வரும் 3 மாடி வீடு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அவனது வீட்டை குற்றவழக்கில் சேர்க்க இயலவில்லை ஆனால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அவன் வீடு கட்டி உள்ளது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று மண்டபம் சாலை மற்றும் ஏரிகரை சாலையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அமைந்துள்ள ஞானசேகரனின் வீட்டை அளவீடு செய்தனர். வரைபடத்தை வைத்து பார்த்த போது ஒரு ஏக்கர் 17 செண்ட் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்த நிலையில் கிண்டி தாசில்தார் மணிமேகலை தலைமையில் அதிகாரிகள் முழுமையாக அளவிட்டனர். இந்துசமய அறநிலைதுறையின் தாசில்தார் திருவேங்கடம் மற்றும் கோவில்நிர்வாக அலுவலர் நாராயணி உள்ளிட்டோர் வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மேலும் 26 குடும்பங்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகட்டி வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீடுகளையும் அங்கிருந்து அகற்றி கோவில் நிலத்தை கைப்பற்ற தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

சேட்டு பொங்கல் கடை கடையாய் வசூல் ஒயிட் அண்ட் ஒயிட் கொள்ளையன்
சிசிடிவி பார்த்து தப்பி ஓட்டம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News