ஷாங்காயில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து பாத்திரங்களை தட்டியும், கோஷமிட்டும் மக்கள் கண்டனம்
சீனா ஷாங்காய் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து வீடுகளில் அடைக்கப்பட்டு இருக்கும் மக்கள் பாத்திரங்களை தட்டி தங்கள் எதிர்ப்பை வெளிகாட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஷாங்காய் கடந்த நாளில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியதை அடுத்து பூட்டுதல்கள் கடுமையாக்கப்பட்டன. கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் வீடுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி பாத்திரங்களை தட்டி கூச்சலிட்டனர்.
பீஜிங்கிலும் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments