பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகம் தான் சிறந்து விளங்கும் -தமிழிசை சவுந்தரராஜன்

0 1741

பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகம்தான் சிறந்து விளங்கும் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் பேத்தி ஸ்மிர்த்தி மற்றும் அவரது தோழி மகதி ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். மேலும், ஸ்மிர்த்தி எழுதிய புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் பேசிய தமிழிசை, படிப்பு குழந்தைகளை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றாலும், அதனுடன் மேலும் ஒரு நடனமோ, இசையோ, ஓவியமோ கற்றுக்கொள்ளும் போது அவர்களின் வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments